இன்று 20.07.2026 மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூரில் புல எண் 697/2-ல் உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறுகனிம சலுகை விதிகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது.
இதில் பல்வேறு சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளது.

கருப்பாயூரணி,அருவி குளம்,வெள்ளுத்து நீருற்று ஆகிய நீர்நிலைகளும், ஓடைகளும், அங்கீகரிக்கப்பட்ட வீடுகளும்சாலைகளும்,சமணர் படுக்கை,கல்வெட்டு போன்ற தொல்லியல் சின்னங்களும்,அழிவின் விளிம்பு நிலையில் உள்ள அரிய வகை சாம்பல் நிற தேவாங்குகளும்,பல்லுயிர் சூழலும் சிறுகனிம சலுகை விதிகள் வரையறுக்கப்பட்ட சட்டங்களுக்கு புறம்பாக உண்மை ஆவணங்களை மறைத்து சட்டவிரோதமாக நடைபெற்று வந்துள்ளது.

இதனால் க.புதூர்,களப்பாரை,பால்குடி,முத்துகருப்பன்பட்டி,அய்வத்தான் ஊர் பொதுமக்களின் குடிநீர்,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த கல்குவாரியை மூடுவதற்கு கடந்த ஆண்டு சாலை மறியல் போராட்டம் செய்தார்கள். மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள் நடவடிக்கை இல்லை. இருப்பினும் ஏக போகமாக கல்குவாரி வேலை நடைபெற்று வந்தது.

இந்த போராட்டம் வீரியமாக கடந்த 15.06.2026 அன்று மறுபடியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் விளைவாக மேலூர் வட்டாட்சியர்,கனிம வளத்துறை தற்காலிகமாக மூடுவதாகவும்,விதிமீறல்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்பு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மக்களும் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டார்கள்.
அதற்கு பின்பு கல்குவாரி குண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களையும், முன்னணியாக நின்றவர்களையும் அச்சுறுத்தும் வேலையை செய்தார்கள்.
மக்களும் கொட்டாம்பட்டி காவல்துறையிடம் பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுத்தார்கள்.
கல்குவாரி மூடிய பின்பும் கல் உடைக்கும் வேலைகள் நடந்து வந்தது.
மேலும் மேலூர் வட்டாட்சியர்,கனிம வளத்துறை ஆய்வு முறையாக நடத்தவில்லை.
இதனால் க.புதூர்,களப்பாரை,பால்குடி,முத்துகருப்பன்பட்டி பொதுமக்கள் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் க.புதூர் சட்டவிரோதமாக செயல்பட்ட வி.ஆடுதுறை கல்குவாரியை முறைகேடுகளை ஆய்வு செய்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தார்கள்.




