• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம்..,

BySeenu

Jul 20, 2026

கோவை சின்னதாடகம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இயங்கி வரும் ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை சார்பில் மாபெரும் இலவச பல்துறை மருத்துவ முகாம் கோவை சின்னதாடகம் வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ ஐஸ்வரீயா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

முகாமை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வி. சம்பத்குமார் முதன்மை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். விழாவில் இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழ்நாடு) 2024-2025 கவுரவ செயலாளர் டாக்டர் எஸ். கார்த்திக் பிரபு, சின்னதாடகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஏ. சுமதி, ரோட்டரி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியப் பிரதிநிதிகள், மற்றும் கோவை ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் கோஷல் ராம், கவுரவ செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன், நிதிச் செயலாளர் டாக்டர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

பொதுமக்களின் நலன் கருதி இம்முகாமில் பல்வேறு மருத்துவ ஆலோசனைகளும், பரிசோதனைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டன. சர்க்கரை பரிசோதனை, நரம்பியல் பரிசோதனை, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, மற்றும் கொழுப்பு சத்து கண்டறிதல். கால் பாதம் பாதுகாப்பு பற்றிய ஆலோசனை, உடற்பயிற்சி முறைகள், உணவியல் ஆலோசனை மற்றும் பல்துறை நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் பிரத்யேக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இலவச மருத்துவ முகாமில் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.