மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள மேரி இமாகுலேட் பள்ளியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான சாகசக்காரர் குழு, ஆய்வு செய்பவர் குழு, கண்டுபிடிப்பாளர் குழு,எதையும் பற்றிக்கொள்ளும் மாணவர் குழு, மாணவர் தலைவர், தலைவி மற்றும் பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மதுரை தெற்கு மற்றும் தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி மற்றும் பூரண கிருஷ்ணன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தாளாளர் ரோஸ்லின்,முதல்வர் அமுதா துணை முதல்வர் அனிதா மற்றும் ஆசிரியைகள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிதாக பதவியேற்ற மாணவர் தலைவர்களை வாழ்த்தும் விதமாக மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.





