• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

நயன்தாரா – விக்னேஷ் சிவனை தொலைபேசியில் பாராட்டிய ரஜினிகாந்த்

நயன்தாரா-விக்னேஷ்சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ராக்கி. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தின் புரோமோவில் ரத்தம் சொட்டும் வகையிலான ஒரு கெட்டப்பில் நயன்தாராவும் நடித்திருந்தார். இந்த படத்தில் வசந்த்ரவி, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த 23ந் தேதி வெளியாகி உள்ளது திரைப்பட விமர்சகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்களால் படம் பாராட்டப்பட்டு வருகிறது வணிகரீதியாக படம் திரையிடப்பட்டுள்ளதிரையரங்குகளில் பார்வையாளர்கள் வருகை இன்றி பல ஊர்களில் முதல் நாளே காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது

படம் வெளியீட்டுக்கு முன்பே நயன்தாரா அழைப்பின்பேரில் ராக்கி படத்தை பார்த்த ரஜினிகாந்த், இயக்குனர் பாரதிராஜா, நடிகர் வசந்த் ரவி ஆகியோரை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பாராட்டியிருக்கிறார். அதையடுத்து ராக்கி படத்தை வெளியிட்டுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியிருக்கிறார்.

அதுகுறித்து விக்னேஷ்சிவன் தெரிவிக்கையில், இன்று தலைவர் ரஜினி அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. நயன்தாராவுக்கும் எனக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தலைவர் சொன்ன மனஉறுதியை வார்த்தைகளால் விளக்க முடியாது, என்று அவர் தெரிவித்துள்ளார்.