• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு..,

ByKalamegam Viswanathan

Jul 14, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக அரசு ஆரம்ப பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி நாடக மேடை பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குப்பைகள் அல்லாததால் மலைபோல் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக கடந்த ஒரு வாரமாக இளங்காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி ஊர்வலம் இன்று இரவு நடைபெற உள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து முள்ளி பள்ளத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக வர உள்ளனர். குறிப்பாக நாடக மேடை முன்பு முளைப்பாரி வைத்து கும்மி பாட்டு பாடும் நிகழ்வும் நடைபெற உள்ளது. முளைப்பாரி ஊர்வலத்தில் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் தற்போது நாடக மேடை முன்பு குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவிழா நடைபெறும் என்பதை முன்கூட்டியே தெரிந்தும் ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என கூறுகின்றனர். குறிப்பாக குப்பைகளை கூட அல்லாமல் ஆங்காங்கே குவிந்து கிடப்பதால் முள்ளிப் பள்ளம் கிராமத்திற்கு வரும் வெளியூர் பொதுமக்களும் இதனால் முகம் சுளிக்க கூடிய வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். முள்ளி ப்பள்ளம் ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து இது போன்ற சுகாதார கேட்டை உருவாக்கக்கூடிய அடிப்படை விஷயங்களை கூட செய்ய மறுப்பதாக கூறுகின்றனர்.

ஆகையால் ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள பணியாளர்களை மாற்றி புதிய பணியாளர்களை நியமித்து ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வாடிப்பட்டி யூனியன் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.