மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் டி.வி.எஸ்., g ஷோரூம் உள்ளது. சர்வோயர் காலனியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இந்த ஷோரூமை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு இங்கு பணி முடித்தபின் ஊழியர்கள் ஷோரூமை பூட்டிக் கொண்டுசென்றனர். திடீரென ஷோரூமில் இருந்த ஒரு மின்சார பைக் தீ சிறிது நேரத்தில் அணைக்க முடியாத அளவிற்கு தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

மதுரை தல்லாகுளம், நிலைய அலுவலர் வெங்கடேசன் அனுப்பானடி நிலைய அலுவலர் அசோக் குமார் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு உட்பட பல்வேறு பகுதியில் இருந்தும் 3 தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்தன. ஷோரூமில் பற்றிய தீயை போராடி அணைத்தனர். இச்சம்பவத்தில் அந்தப் பகுதியில் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தப்பின.
அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.




