தாம்பரத்தில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பாரதி திடலில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் வீர.அலெக்ஸ்சாண்டர் தலைமையில் மகளிர் அணி பொறுப்பாளர் பா.தாட்சாயணி வரவேற்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளராக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் சுபாஷ் மோகன், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புரட்சி வேங்கை தெ.வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்

இக்கூட்டத்தில் சமூக நீதி சமத்துவம், அரசியலமைப்பு மதிப்புகள், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிந்தனைகள் மற்றும் மக்கள் உரிமைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும், அரசியலமைப்பு பாதுகாப்பை உறுதி செய்யவும் பொதுமக்கள் ஒன்றிணைய வேண்டும் என பேச்சாளர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிகழ்வில் மாநில தலைவர் பாண்டியராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் இர.பரந்தாமன், மாநில பொருளாளர் சுதாகர், மாநில துணை பொதுச் செயலாளர் வே.ராகவேந்திரன், மாநில இணை பொது செயலாளர் மா.சுரேஷ், மாநில துணை பொதுச் செயலாளர் ச.இளையராஜா, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வ.பாஸ்கரன், செங்கல்பட்டு மாவட்டம் தலைவர் ம.சதிஷ், பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், இயக்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி அமைதியான முறையில் நடைபெற்றதுடன், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.




