விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ரயில் நிலையம் அமரத் பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் புதுப்பிக்க 12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிய ரயில் நிலைய கட்டிடம் புதிய நுழைவாயில் டிக்கெட் முன்பதிவு அறைகள் புதிய நடை மேம்பாலம் ரயில் பெட்டிகளில் வரிசை எண் காட்டக்கூடிய டிஜிட்டல் திரைகள் கூடுதல் நடைமேடை பயணிகள் அமர்வதற்கான கூடுதல் இருக்கைகள் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக கூடுதல் சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரங்கள் இதுபோன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது இந்த நிலையில் தென்னக ரயில்வே துறையின் பொது மேலாளர் ஆர் என் சிங் இன்று ஆய்வு செய்தார்

ஆய்வின் போது தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் நேரில் சந்தித்து செங்கோட்டை மற்றும் தாம்பரம் இடையே சிலம்பு விரைவு ரயில் தினந்தோறும் இயக்க வேண்டும். சென்னை எழும்பூர் தென்காசி இடையே புதிய வந்தை பாரத் ரயில் சேவை துவக்க வேண்டும். அதேபோல் ஈரோடு திருப்பூர் வழியாக கொல்ல மற்றும் பெங்களூர் செல்லும் புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்த வேண்டும்.
மதுரை இன்டர்சிட்டி விரைவு ரயில் கோயம்புத்தூர் மதுரை செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும் அதேபோல் அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்திற்கு இடமளிக்கும் வகையில் செங்கோட்டை ரயில் நிலையத்தில் 5 மற்றும் 6புதிய நடைமேடை அமைக்க வேண்டும்

கடந்த காலையில் செயல்பட்ட சோழபுரம் கரிவந்தநல்லூர் மற்றும் நைனாகரம் ரயில் நிலையங்களை புனரமைப்பு செய்து பயணிகள் வசதிக்காக மீண்டும் திறக்க வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மனு வலித்தார் இந்த நிகழ்ச்சியில் இராஜபாளையம் திமுக தெற்கு நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ரயில் பயனாளிகள் சங்கம் சார்பில் இதே கோரிக்கை முன்வைத்து மனு அளித்தனர்




