விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்தது மண் குண்டாம்பட்டி கிராமம். இக்கிரமத்தின் மெயின் தெருவில் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டட பணிக்கான கிரவல் மண், செங்கல், உள்பட கட்டுமான பொருட்கள் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் ஏதும் நடவடிக்கை எடுக்காததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கட்டுமான பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






