மதுரை பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் நெடுஞ்சாலை குமரகம் அருகே தனியார் மருத்துவமனை மற்றும் பேங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.

இது குறித்து தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி அவர்களிடம் இது குறித்து சமூக ஆர்வலர்கள் ஆக்கிரமங்களை கோரிக்கை விடுத்து இருந்தனர். கொடுத்த சில மணி நேரத்திலேயே அப்பகுதியில் உள்ள சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏதும் இல்லாமல் வாகனங்கள் கடந்து செல்வதற்கு வழிவகை செய்து கொடுத்தார். இதனை செய்து கொடுத்த தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.





