• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோவையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக திடீர் சோதனை..,

BySeenu

Jul 4, 2026

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் “போதைப்பொருள் இல்லா சமுதாயம் குற்றங்கள் இல்லா கோவை” என்ற இலக்குடன் கோவை மாவட்ட காவல்துறை பல்வேறு தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் அறிவுறுத்தரின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள் அறைகள் பிற மாநில மற்றும் மாவட்டங்களை சேர்ந்தோர் தங்கி உள்ள இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகிறதா மளிகை மற்றும் பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்டம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். பேரூர் டி.எஸ்.பி சுரேஷ், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி கரிகால் பாரி சங்கர், ஏடிஎஸ்பி ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 400க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள் அறைகளில் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர். அங்கு போதைப்பொருள் ஏதேனும் உள்ளதா புகையிலைப் பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா சட்டவிரோத செயல்கள் ஏதாவது நடைபெறுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகாலை நடைபெறும் இந்த சோதனையால் சோதனை நடைபெறும் இடங்களில் சற்று பதற்றமான சூழல் நிலவியது.