• Thu. Jul 2nd, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு பதில் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டது..,

மதுரை சௌராஷ்ரா கல்லூரியில் வேர்களை தேடி விருது வழங்கும் விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார்.

விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் முதலில் தேசி கீதம் பாடப்பட்டது

தென்னிந்திய கல்வி மையம் சார்பில் (ஐ என் ஏ ) நேதாஜி படையின் தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு கட்டுரை மற்றும் குறும்பட போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் வேர்களை தேடி நிகழ்ச்சி மதுரை சௌராஷ்ட்ரா கல்லூரியில் நடைபெற்றது.

வேர்களை தேட விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ராஜேந்திரா விஸ்வநாத் அர்லேக்கர் கலந்து கொண்டார், மற்றும் கீர்த்தி சக்ரா விருது பெற்ற லேண்ட் ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சௌராஸ்டிரா கல்லூரி தாளாளர் சந்திப் குமார் மற்றும் செயலாளர் குமரேஷ் மற்றும் கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஐ என் ஏ நேதாஜி படையில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களில் கட்டுரை போட்டியில் சென்னை திறந்த வெளி பல்கலைகழக மாணவர் யுவ விக்ரம் முதல் பரிசினையும் செட்டிநாடு வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி மைய மாணவி அஷ்மதி ஜெருஷா 2வது பரிசும் , சென்னை சர்வதேச இதய மைய மாணவி வேத க்ஷயா 3வது பரிசினை பெற்றனர்.

இதே போல் குறும் பட போட்டியில் செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மாணவி அவ்வதிகா ஹரிணி முதல் பரிசும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் யுவராஜ் குமார் 2 வது பரிசும் ,சென்னை ராமகிருஷ்ணா சென்னை ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஜெகதீஸ்வரன் 3வது பரிசு களை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வழங்கினார்.

தமிழ்த்தாய் வாழ்த்தப் பாடல் முதலில் பாடாமல் வந்தே மாதரம் பாடல் முதலிலும் தேசிய கீதம் 2வது பாடலாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது பாடப்பட்டது ஒன்றிய அரசின் உறுதியை எதிரொலிக்கிறது .

வைகை ஆற்றை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும்; இல்லையெனில் ஆளுநர் மாளிகை நடவடிக்கை எடுக்கும்- இதுவும் தேசப்பற்று தான் துப்பாக்கி எடுத்து போருக்கு செல்ல வேண்டும் என அவசியம் இல்லை-” – ஆளுநர் அர்லேகர்

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் சௌராஷ்டிரா கல்லூரி மற்றும் சென்னை தென்னிந்திய ஆய்வு மையம் (Centre for South Indian Studies) இணைந்து நடத்தும் INA வீரர்களை போற்றும் கட்டுரை மற்றும் குறும்படப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் முதலில் வந்தே மாதரம் அதைத் தொடர்ந்து தேசிய கீதம் அதன் பின்னர் இறுதியாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

நமது சுதந்திரம் போராட்ட வீரர்களின் நினைவு கொள்ளும் நிகழ்ச்சி இது. கீர்த்தி சக்கர விருது பெற்ற மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு வணக்கம். சகோதரி சகோதரர் மாறே வணக்கம்(தமிழில் பேசினார்).

இந்த முறையினால் தமிழில் பேச முடியவில்லை. அடுத்த முறை நான் இங்கு வரும்போது தமிழில் பேசுவேன். ஏனென்றால் இப்போது எனது மொழியாகிவிட்டது. எனது மொழியை நான் தவிர்க்க முடியாது. ஹிந்தி பேசினால் உங்களுக்கு புரியாது என்பதால் வெளிநாட்டு மொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன்.

நான் சொன்னதைப் போல நாம் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியில் சந்தித்திருக்கிறோம். இது கல்லூரி ஆண்டு விழாவோ பட்டமளிப்பு விழாவோ இல்லை.

நம்முடைய தமிழ்நாடு கலாச்சாரம் எப்படி சிறந்தது என்பதை நினைவு கொள்கிறோம். நமது கலாச்சாரம் வரலாறை புரிந்து கொள்ள நமக்கு சிறப்பு தினங்கள் தேவையில்லை எந்த தினமாக இருந்தாலும் அதை நாம் கொண்டாடுவோம். அதனால் இன்று நாம் நமது கலாச்சாரம் குறித்து பேசி கொண்டாடுகிறோம்.

ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் பேசினார் அவருக்கு கீர்த்தி சக்கர விருது வழங்கி கௌரவித்துள்ளோம். நமது அரசு மற்றும் நிர்வாகம் அவரை கௌரவித்துள்ளது ஆனால் நாம் மோகம் அவரை கௌரவிக்கிறோமா.

அவரைப் போன்றவர்களை கௌரவப்படுத்துவது சமூகத்தில் பொறுப்பு. இந்தக் கல்லூரி அதை செய்துள்ளதற்கு வாழ்த்துக்கள்.

இந்த சமூகம் செய்திருக்க வேண்டியதற்கு முன்னுதாரமாக இந்த கல்லூரி செய்துள்ளது அதற்கு பாராட்டுக்கள். சௌராஷ்ட்ரா கல்லூரி ஒரு அமைப்பாக சேர்ந்து 1967-ல் தொடங்கப்பட்டது சிலர் உங்களிடம் கேட்கலாம் குஜராத்தில் இருந்து எப்படி இங்கு வந்தீர்கள் என்று எண்ணூர் ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் இனம் ஒரு நாடு இல்லை. ஆப்கானிஸ்தான் வரை ஒரே நாடுதான்.

அதன் பிறகு தான் தேவையில்லாத எண்ணங்கள் நமக்குள் வந்ததால் நமக்குள் பிரிவினை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தான் நமது கலாச்சாரம் மண்ணிற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து பிரிவினையை எதிர்த்தோம். அதை நாம் மறக்க முயற்சித்தாலும் மீண்டும் இதுபோல நடக்க கூடாது என்பதற்காக நினைவில் கொள்ள வேண்டும்.

அதனால்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் இந்த நாட்டிற்கு என்ன செய்துள்ளார், அவர் தலைவராக மாற்றப்பட்ட அவர் இந்த நாட்டிற்காக தலைவர் ஆகவே பிறந்தவர். அவருடைய இந்திய தேசிய ராணுவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அனைவரும் நேதாஜியின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும் இந்த தேசத்திற்கு அவர் செய்த சேவையை புரிந்து கொள்ள வேண்டும் நம்மில் நிறைய பேருக்கு அவர் என்ன செய்துள்ளார் என்று தெரியாது. பலரும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்த நாட்டில் சுதந்திரத்திற்காக அதேபோல நேதாஜியும் என்ன செய்திருக்கிறார் என ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்ச்சி முடிந்து நான் இங்கிருந்து வெளியே செல்லும்போது ஒரு உறுதி கொள்ள வேண்டும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து நாம் படிப்போம். நேதாஜி சுதந்திரத்தின் அடையாளம். இந்த தேசத்திற்கு அவரால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்திற்கு பாரம்பரியமே உள்ளது.

சமீபத்தில் எனது நண்பர் மூலம் தமிழகத்திலிருந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பற்றி தெரிந்துகொள்ளேன் நிறைய பேர் வெளியே தெரிகிறார்கள், நிறைய பேர் வெளியே தெரியாமலே இதற்காக போராடி இருக்கிறார்கள்.

பாரத மாதா என்பது இந்தியாவின் அடையாளம் தமிழ்நாடு என்றும் முதுகில் குத்தியதே இல்லை. நேதாஜி இந்த தேசத்திற்கு வழங்கியதை நாம் கொண்டாட வேண்டும். பலருக்கும் நமது நாட்டின் வரலாறு தெரியும் என்பதால் நான் விவரமாக சொல்ல தேவையில்லை. ஆனால் நேதாஜியை போன்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் இப்போது இல்லை ஆனால் அவர்களை பாடமாக நாம் எடுத்துக் கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும். தேசப்பற்றுதான் நமக்கு தேவையானது.

வெற்றி பெற்றவர்கள் மட்டும் இதை நினைவில் கொள்ள வேண்டும் என இல்லை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கலந்து கொள்ளாதவர்கள் என அனைவரும் இந்த நாடு என்னுடையது நான் இந்த உழைக்க நாட்டிற்காக வேண்டும் என நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவிற்குள் வந்த அனைவரும் சுற்றுலாவிற்கு வரவில்லை, நாட்டை சுரண்டுவதற்காக கொள்ளையடிப்பதற்காக வந்திருந்தார்கள். நேதாஜி தலைமையில் இந்தியாவை கொள்ளை அடிப்பதற்காக வந்தவர்களை எதிர்த்து சண்டையிட்டார்கள்.

வெளிநாட்டவர்கள் எதற்காக வந்தார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். டச் மற்றும் பிரிட்டிஷ் நாட்டவர்கள் எதற்காக இங்கே வந்து ஆண்டார்கள் என்கிற காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அது அவர்களின் ஆளுமை இல்லை நமது தவறுதான்.

அவர்கள் எதற்காக வந்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ளவில்லை. இதன் மூலம் நாம் ஒரு படத்தை கற்றுக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் வரக்கூடாது நான் சுதந்திரம் பெற்று விட்டோம் ஆனால் வேறு யாரும் மீண்டும் இங்கு வந்து நம்மை அடிமையாக்க கூடாது என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும் அது நமது கடமை. உலகத்திலேயே நாம் மிகப்பெரிய நாடு.

உலகில் உள்ள அனைவரும் ஒரே குடும்பம் தான் ஆனால் நம்மை வந்து யாரும் ஆள நினைத்தால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம். நாம் அனைவரும் தேசப்பற்றாளர்கள் தான் ஆனால் அது குறிப்பிடத்தக்கதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் புத்தகங்களில் படித்து விட்டு, கட்டுரை எழுதுவதுடன் கடந்து விடுவோம்.

நமது சுதந்திரத்திற்காக காரணம் ஒட்டுமொத்த தேசத்தின் பங்களிப்பு என இந்த அமைப்பினர் ஞாபகப்படுத்தியுள்ளனர். எனக்கு சிறிது துளி ரத்தத்தை கொடுங்கள் நான் சுதந்திரத்தை கற்றுத் தருகிறேன் என நேதாஜி சொன்னார்.

இங்க இருந்து கன்னியாகுமரி வரை ஒரே நாடுதான், ஒற்றுமையான நாடு. நாம் இப்போது ஒற்றுமையாக உள்ளோமோ அப்போது சிறந்த நாடாக இருப்போம். இளைஞர்களின் பலம் இந்த காலத்தில் அதிகமாக வெளிப்படுகிறது. தற்போது என்னத்திற்கு நான் வந்து கொண்டிருக்கும் போது எனக்கு வைகை ஆறு எனது உதவியாளர் எனக்கு காட்டினார். அந்த ஆற்றைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் ஆறு உள்ளது நீர் எங்கே. நீர் இல்லை ஆறு என்றால் அதில் நீர் இருக்க வேண்டும்.

இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன் ஏதாவது செய்ய வேண்டும். குஜராத்தில் நிரஞ்சனா என்ன ஒரு ஆறு இருந்தது அதுவும் இது போல தான் வற்றி இருந்தது. அன்பு சதீஷ் என்பவர் என்னிடம் வந்து நான் ஆளுநராக இருந்தபோது அந்த ஆற்றை சுத்தம் செய்வோம் எனக்கூறி ஒரு ஆடை காட்டி ஏற்கனவே தான் சுத்தம் செய்ததாக காட்டினார். அதேபோல இங்கு வைகை ஆறிலும் செய்ய முடியும்.

மதுரையை சேர்ந்த இளைஞர்கள் அதை இலக்காக மாற்றி அதற்கு முயற்சி செய்ய வேண்டும். இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு சக்தி மிக முக்கியமானது. அந்த ஆறில் தண்ணீர் வந்தால் அந்த கரையில் நாகரிக வளர்ச்சி ஏற்படும். கடவுள் ஆறுதல் ஒற்றுவதற்கு காரணம் கடவுள் என்று சொன்னார்கள். ஆனால் கடவுள் இதற்கு காரணம் இல்லை நாம்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். யாராவது அதற்கு முயற்சி எடுக்க வேண்டும், யாரும் முயற்சி எடுக்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகை முயற்சி எடுக்கும். இதுவும் தேசப்பற்று தான் துப்பாக்கி எடுத்து போருக்கு செல்ல வேண்டும் என அவசியம் இல்லை.

வைகை ஆறு மட்டுமல்ல இளைஞர்கள் சக்தியால் இன்னும் பல மாற்றங்களை கொண்டுவர முடியும். சமூகத்தில் நமது சொந்த முயற்சி இருக்க வேண்டும். அனைத்து மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். கல் நிச்சயமாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள். நாம் இன்று ஒரு உறுதிமொழி எடுப்போம் நேதாஜி இந்த தேசத்திற்காக உறுதிமொழி எடுத்ததைப்போல நமது நாட்டை முன்னேற்றுவதற்கு நாம் உறுதிமொழி எடுப்போம் என கூறி உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரம் பேசுகையில்:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ராணுவத்திற்கு ஆள் சேர்த்தது போது தென் தமிழகத்திலிருந்து அதிகமாக ஆள் சென்றதாக சொல்வார்கள் அது உண்மைதான் நானும் அந்த வகையறாவை சேர்ந்தவர் தான்.

எனக்கு ராணுவத்திற்கு செல்ல வேண்டும் என்று ஐந்து வயதில் ஆசை வந்தது எனது அம்மாவின் ஆசையும் அதுதான். கஷ்டப்பட்டு 19 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தேன்.

முதலில் சாதாரண இடங்களில் வேலை பார்ப்பது எனக்கு விருப்பமில்லை நேருக்கு நேர் சண்டையிட வேண்டும் என்று விருப்பப்பட்டு தீவிரவாதிகள் இருக்கும் இடத்தில் வேலை செய்ய வேண்டும் என பணிமாற்றம் செய்து சென்றேன்.தமிழர்களுக்கு இது இயற்கையான குணம்.

எதையும் சண்டை போட்டு வாங்குவது நமது குணம். அப்போது அங்கு இருந்த தீவிரவாத அமைப்புடன் எனக்கு நடைபெற்ற சண்டையில் ஒரு தீவிரவாதி என்னை சுட்டு எனது உயிர் போகும் நிலைமையிலும் மைனஸ் குளிரிலும் அவர்கள் தப்பிக்க கூடாது என்னும் எண்ணம் தான் எனது உயிரே போனாலும் தப்பிக்க விடக்கூடாது என்கிற எண்ணம் தான் இருந்தது.

நான் நினைத்திருந்தால் பின்னால் சென்று இருக்கலாம் ஆனால் பின்னால் செல்லக்கூடாது அவர்களை பின்னால் செல்ல வைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது.

நேதாஜி வழியில் நாங்கள் இப்போது செல்கிறோம் இந்தியாவும் அவரது வழியில் தான் செல்கிறது.

ராணுவத்திற்கு சென்றால் அவர்களின் பிள்ளை ஆகிவிடுவோம் அவர்கள் நம்மை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். நான் காயமடைந்திருந்த போது எனது உறவினர்களை கூட வர வேண்டாம் என்று சொல்லி ராணுவமே என்னை பிள்ளை போல் பார்த்துக் கொண்டது.

நாட்டுக்காக உழைப்பவர்களை இந்த நாடு எப்போதும் மறக்காது. ஜெய்ஹிந்த் எனக்கூறி உரையை நிறைவு செய்தார்.