• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சாலையின் நடுவே ராட்சத மரங்கள் விழுந்ததால் மின் கம்பங்கள் சேதம்..,

ByP.Thangapandi

Jul 1, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் 1000 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு செல்லும் சாலையின் இரு புறமும் பழமையான மரங்கள் அதிகமாக உள்ளன., இந்த மரங்களில் சுமார் 200 ஆண்டு பழமையான வாகை மற்றும் புளியமரங்கள் காற்றின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

சாலையோரம் இருந்த மரம் சாய்ந்ததால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்தன., மேலும் பிரதான சாலையில் விழுந்த மரத்தினால் இக்கிராமத்திற்கான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜீவா தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடனடியாக மின்வாரிய அலுவலர்களும் மின் விநியோகத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது., உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய்-யும் நேரில் ஆய்வு செய்து மரத்தை அகற்றும் பணியை துரிதப்படுத்தி போக்குவரத்து பாதிப்பை சரி செய்ய அலுவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.