• Tue. Jun 30th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

மதுரை வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் மினிபஸ்கள்..,

ByKalamegam Viswanathan

Jun 30, 2026

மதுரை மாவட்டம் முழுவதிலும் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மினி பேருந்துகளுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மினி பஸ்கள் பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டக் கூடிய குறுகிய சாலைகளில் அதி வேகத்தில் செல்வதாகவும், இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருவதோடு வாகன ஓட்டிகள் அச்சத்தோடு பயணிக்கும் நிலை உள்ளதாக புகார்கள் எழுகின்றது.

இந்நிலையில் மதுரை ஐயர் பங்களா பகுதியில் உள்ள சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த போது அதனை கண்டு கொள்ளாமல் அதிவேகத்தில் சென்ற மினிபஸ்ஸானது பைக்கில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது மோதி விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.

சிக்னல் சிவப்பு நிற விளக்கு வந்த பின்பும அதனை சற்றும் கண்டுகொள்ளாததோடு மினிபஸ் ஓட்டுனர் பாதியில் வந்து நிற்பது பின்னர் பைக் ஓட்டுனர் மீது மோதுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

ஏற்கனவே அதிவேக மினி பேருந்துகள் மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட ஏராளமானோர் மீது மோதி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகர பகுதியில் அதிக அளவிற்கு வேகத்தில் இயங்குவதோடு பொதுமக்கள் மீது மோதும் விபத்து ஏற்படுவதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் மினிபஸ்களின் செயல்பாடுகள் குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் மினி பேருந்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற மேலும் காயம் அடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார்.