• Tue. Jun 30th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,

ByKalamegam Viswanathan

Jun 30, 2026

கரூர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா? அண்ணா திமுகவிலிருந்து விலகியதால் இனி ஆயிரம் ஆண்டுகள் இந்த மண்ணிலே விஜயபாஸ்கர் வாழ்வார்.த.வெ.கவில் சேர்வதால் விஜயபாஸ்கருக்கு இனிமேல் இந்த மண்ணிலே சாவே கிடையாது. எல்லோருக்கும் பிறப்பும்,இறப்பும் ஒருமுறைதான் இருப்பது ஓர் உயிர் அது நம்மை வாழவைத்த கழகத்திற்காக நாம் வாழ்ந்து காட்டினால் வரலாறு இல்லையே அது தகராறு இப்போது கரூர் விஜயபாஸ்கர் தகராறை ஆரம்பித்து வைத்திருக்கின்றார்கள்.

இன்றைக்கு முதல்வர் விஜய் ஊதகின்ற மகுடிக்கு தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே மயங்கி கிடக்கிறார்கள் என யாரும் நினைத்து விட வேண்டாம்.நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க கட்சியை எதிர்த்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து விஜய் ஊதுகிற மகுடிக்கு மயக்கம் அடைந்து வருகிறார்கள் ‌

அதில் கரூர் விஜயபாஸ்கர் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று விஜய் ஊதும் மகுடிக்கு மயங்கி போன ஆறாவது சட்டமன்ற உறுப்பினர் எங்கே போய் நிற்குமோ இந்த ஜனநாயக கேலிக்கூத்து.

இப்படி தொடர்ந்து கொஞ்சமும் கூச்சம் அல்லாமல் அச்சமின்றி அரங்கேற்று வருகின்ற அரசியல் அலங்கோலத்தில் தட்டி கேட்பதற்கு விஜயின் மகுடிக்கு மயங்கி கிடக்கிற தமிழ் சமுதாயத்திற்கு இப்போது வேண்டுமானால் துணிச்சல் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இனி இப்படியே தான் காலம் போகும் என்று முதல்வர் விஜய் நினைத்தால் அது தவறு விரைவிலேயே தமிழ் சமுதாயம் உங்களுக்கு துணிச்சலான முடிவை தருவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது.

ஜனநாயக திருவிழாவிலே அடுத்தடுத்து ஆள் பிடிக்கிற வேலையில் சலைக்காமல் சாதித்து காட்டி வருகிறார் முதல்வர் விஜய் இது எதைக் காட்டுகிறது கோயில் திருவிழாவிலே பிள்ளை பிடிக்கிறவர்களுக்கும், ஜனநாயக திருவிழாவிலே ஆள் பிடிக்கிறவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதுதான் இப்போது நமக்கு மட்டுமல்ல இந்த நாட்டு மக்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

ஆகவே தமிழக வெற்றிக்கழகம் அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கிற வழியிலே இது 12 சட்டசபை தொகுதிகளுக்கு மொத்தமாக இடைத்தேர்தல் நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார் அதுவரை இந்த அரசியல் அலங்கோலங்கள் ஜனநாயக கேலிப் கூத்துக்கள் இந்த தமிழ்நாட்டிலே அரங்கேற்றம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்

என்ன செய்வது காற்று த.வெ.க பக்கம் வீசுகிறது ஆகவே காற்றுள்ள உள்ள போது தூற்றிக்கொள்ள வேண்டும் என்று அந்த பழமொழியை உண்மை வழியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காற்று திசை மாறும் அப்படி காற்று திசை மாறுகிறபோது ஜனநாயகத்தின் வலிமை என்னவென்று விஜய்க்கு அப்போதுதான் புரியும்.

இருந்தாலும் இந்த ஜனநாயக கேலிகூத்தை நடத்துகிற ஆணவம் அழிவைத் தரும் என்பதை சுட்டிக்காட்டி எச்சரிக்கையாக இன்றைக்கு எல்லோரும் இருக்க வேண்டும்‌
கரூர் விஜயபாஸ்கர் நீங்கள் பொறுத்து இருக்க வேண்டாமா இது நியாயமா தர்மமா என்று கேட்பதை தவிர வேறு வார்த்தைகள் இல்லை என கூறினார்.