• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தின்கீழ் ₹2,400 கோடி விடுவித்த பிரதமர் மோடி..,

ByKalamegam Viswanathan

Jun 20, 2026

பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் புதிதாக நியமனமானவர்களுக்கு ஊக்கத்தொகையிணை காணொளி வாயிலாக பிரதமர் மோடி விடுவித்தார்.

இந்த நிகழ்வில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு மொத்தம் 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை விடுவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 300க்கும் மேற்பட்டோருக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதே அரசின் முக்கிய நோக்கம் என்றும், வளர்ந்த இந்தியா உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் வலியுறுத்தினார்.