மதுரை வேலம்மாள் பள்ளிகள் குழுமம் சார்பில 12-வது சர்வதேச யோகா தின விழா வேலம்மாள் குளோபல் பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

வேலம்மாள் குளோபல் பள்ளியின் கிரிக்கெட் மைதானத்தில் உயர் நீதி மன்ற நீதியரசர் G.R சாமிநாதன் தலைமையில் வேலம்மாள் குடும்ப தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.
வேலம்மாள் குளோபல் பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் சர்வ தேச
யோகா தினத்தில் “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” (Yoga for Healthy Ageing) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறும் .
இந்த மாபெரும் யோகா நிகழ்வில், மதுரை மாவட்டத்தில் உள்ள ஐந்து வேலம்மாள் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 3,300 மாணவர்கள் மற்றும் 200 பணியாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு யோகா பயிற்சியை வழிநடத்தினார்
யோக பயிற்சியில் விருக்ஷாசனம், புஜங்காசனம் மற்றும் தனுராசனம் போன்ற ஆசனங்களையும், பிராணாயாமப் பயிற்சிகளையும் மாணவர்கள் செய்து காட்டினார்.
மேலும் ஆரேக்கியம் உடல் நலம், மனத் தெளிவு மற்றும் மன அமைதி ஆகியவற்றை அடைவதற்கான உயர் வழியாக யோகா திகழ்கிறது.
.மன அழுத்தம், மனித வள மேலாண்மை, கவன ஒருமைப்பாடு மற்றும் முழுமையான ஆரோக்கியம் ஆகியவற்றில் போகா கவனம் செலுத்தும்.
தினமும் யோகா செய்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
மாணவர்கள் நிகழ்த்திய யோகா செயல் விளக்கங்களை பாராட்டிய அவர், யோகா பயிற்றுவிப்பாளர் மாணவர்களை மிகுந்த பொறுமையுடனும் மென்மையான அணுகுமுறையுடனும் வழிநடத்தியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், உலக செஸ் நட்சத்திரமான பிரக்ஞானந்தாவின் வெற்றிக்குப் பின்னால் இருந்த முக்கிய காரணம் அவரது கவனம் மற்றும் ஒருமுகப்படுத்தும் திறன் எனக் குறிப்பிட்டார். அந்தத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு யோகா மிகவும் அவசியமானது என்றும் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது 70 வது வயதில் உடல் நலன் ஆரோக்கியமடைய பயிற்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் யோகா பயிற்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தத்துவஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து கடைப்பிடித்ததை எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டிய நீதிபதி சுவாமிநாதன் யோகா உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் மன உறுதி, ஒழுக்கம், கவனம் மற்றும் உணர்ச்சி சமநிலையையும் மேம்படுத்துகிறது என்றார்.
மேலும், “யோகாவை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டால், மாணவர்கள் தங்களது இலக்குகளை எளிதில் அடைய முடியும். கவனமும் ஒருமுகப்படுத்துதலும் இருந்தால், ஒவ்வொருவரும் தங்களது கனவுகளை நனவாக்க முடியும்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கல்வி நிறுவனத்தின் தலைவர் முத்துராமலிங்கம் யோகா குறித்து பேசிய அவர், தலைவர் ஒரு தொலைநோக்கு பார்வையாளர் மட்டுமல்லாமல், மாணவர்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் கல்வியாளர் என்றும் பாராட்டினார்.
மாணவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைவதே கல்வி நிறுவனத்திற்கும் அதன் தலைவருக்கும் அவர்கள் செலுத்தும் உண்மையான நன்றிக்கடனாக அமையும் என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, “யோகா என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்; யோகா மூலம் நான் வெற்றியை அடைவேன் என்பதே இந்த சர்வதேச யோகா தினத்தின் முக்கிய செய்தியாகும்” என்று கூறி மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.




