• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மூடப்பட்ட சமூக நீதி விடுதிகளை மீண்டும் திறக்க அரசு ஊழியர்கள் ஆசிரியர் சார்பில் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jun 13, 2026

மனு குறிப்பிட்டுள்ள. கோரிக்கைகள் விவரம் திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் சமையலர்கள் இரவு காவலர்களாக பணியாற்றும் ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் அலுவலக உதவியாளர்கள் உயர்வு வழங்க வேண்டும் நம் மாவட்டத்தில் பெரும்பாலான மாணவர் மாணவியர் விடுதிகள் மாணவர்கள் இல்லாத காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது மீண்டும் மாணவர் சேர்க்கையை நடத்தி மூடப்பட்ட விடுதிகளை திறக்க வேண்டும் ,

மாணவர்கள் அதிகம் சேராத விடுதிகளில் அப்பகுதியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கான இரவு பாடசாலையாக அமைத்தும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சி அளிக்கும் பயிற்சி மையமாக உருவாக்க வேண்டும்

நம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் 20 22ஆம் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி பதவி உயர்வு பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இதுநாள் வரை பணி வரன்முறை செய்யப்படவில்லை பணி வரன்முறை செய்து உதவிட அம்மா அவர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

உபயோகிக்கப்படாத பள்ளிக்கட்டடங்கள் இடித்து பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும் , பொது பணித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து இடுப்பதற்கான வாய்ப்பு இல்லை கட்டடத்தை வேண்டுமானால் சரி செய்து உபயோகப்படுத்தலாம் என தெரிவிக்கின்றனர் கட்டடங்கள் மைதானத்தில் குறுக்கே இருப்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் பார்வையில் இருப்பதில்லை மாணவர்களை கட்டுக்குள் வைத்திருப்பது பெரும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலைய உரிய அளவில் ஆய்வு செய்து உபயோகம் இல்லா பள்ளிக் கட்டடங்களை இடக்க ஆவன செய்ய வேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகள பரிசீலனை செய்து நிறைவேற்றி உதவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அம்மா மதிப்புமிகு எஸ்.கவிதா அவர்களிடம் வழங்கி அனைத்துறை கோரிக்கைகளை தெரிவித்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் நிதானமாக வேறு எந்த கோரிக்கைகள் இருக்கிறது என பொருமையுடன் கேட்டு தங்கள் கோரிக்கைகளை அந்தந்த மாவட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.

முன்னதாக புதியதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வாழ்த்துத்தெரிவித்து பொன்னாடை அணிவித்து புத்தகம் பரிசாக வழங்கி வாழ்த்தினர். இந்த நிகழ்வில் மாநில மாவட்ட வட்ட ஒன்றிய நிர்வாகிகள் என 150 க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பினர் கலந்துக் கொண்டனர்.