• Sat. Jun 13th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

BySeenu

Jun 13, 2026

கோயம்புத்தூரில் நடைபெறும் புகழ்பெற்ற குயின் கோயம்புத்தூர் மற்றும் பிரின்சஸ் கோயம்புத்தூர் அழகிப் போட்டிகளை நடத்தி வரும் ஃபேஷன் கலேக்ட்டிவ் கோயம்புத்தூர் நிறுவனம், ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆகியவற்றுடன் இணைந்து பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்பகட்ட கண்டறிதல் மற்றும் பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சிறப்பு சமூக நல முயற்சியை தொடங்கியுள்ளது.

பெண்கள் தங்களது உடல்நலத்திற்கு முன்னுரிமை அளித்து, முறையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை முயற்சி வலியுறுத்துகிறது.
இந்த தளத்தின் மூலம் போட்டியாளர்கள் விழிப்புணர்வு தூதர்களாக செயல்பட்டு, புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையை பெறுவதின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே தகவல்களை பரப்பவுள்ளனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஹர்ஷினி – ராவ் மருத்துவமனை, திருமதி சித்ரா மனோகர் – தலைவர், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர், திருமதி ரேஷ்மா ஸ்ரீஜய் – ஃபேஷன் கலேக்ட்டிவ் கோயம்புத்தூர் மற்றும் குயின் கோயம்புத்தூர் & பிரின்சஸ் கோயம்புத்தூர் அமைப்பின் பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா மோட்வானியும் இந்த முயற்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்து, பெண்கள் தங்களது உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்தி, மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.