• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஆதி திராவிடர் மக்கள் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..,

ByP.Thangapandi

Jun 8, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திம்மநத்தம் கிராமத்தின் சுமார் 100 க்கும் மேற்பட்ட பட்டியலின ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.,

இந்நிலையில் இக்கிரமத்தின் கண்மாய் அருகில் பல ஆண்டுகளாக இறந்தவர்களின் உடலை ஏரியூட்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது., இந்நிலையில் அரசு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எரியூட்டும் மயானம் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுத்துள்ள சூழலில் அதே ஊரைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சார்ந்தவர் பால்சாமி என்பவர் தோட்டத்தின் அருகில் அரசுக்கு சொந்தமான பாதை, மயானம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் பால்சாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆதிதிராவிடர் மயானத்தை வரும் 10 ந்தேதி அகற்றுவதற்கு உசிலம்பட்டி வட்டாட்சியரிடம் ஆணை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆதி திராவிடர் பொதுமக்கள் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் கிராம பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் சட்ட ரீதியாக சந்திக்க அறிவுறுத்தியதையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.