• Mon. Jun 8th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

நீதிமன்ற தீர்ப்பையும் அவமதித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமாருக்கு கண்டனம்!

ByKalamegam Viswanathan

Jun 8, 2026

கார்த்திகை தீபத்திருநாளன்று பாரம்பரியமாக தீபம் ஏற்றப்பட்ட தமிழ்கடவுள் முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை மஹாதீபம் ஏற்றக்கோரி முருகப்பக்தர்கள்,இந்து அமைப்புகள் சார்பாக பல வருடங்களாக பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இது சம்பந்தமாக கடந்த வருடம் தீபம் ஏற்றக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் அடியேன் உள்பட பல்வேறு தரப்பினர் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதியரசர்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த போது தீபத்தூண் ஆய்வு ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்கள்.

ஆனால் கடந்த ஆட்சியில் திமுக அரசாங்கம் இஸ்லாமியர்கள் ஓட்டுக்காகவும்,கம்யூனிஸ்ட் கட்சி,விசிக மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாகவும் தீபத்தூணில் தீபம் ஏற்றாமலும்,நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமலும் பல இடையூறுகளை ஏற்படுத்திய காரணத்தினால் மதுரை கலெக்டர்,மதுரை காவல்துறையினர், திருக்கோயில் நிர்வாகம் போன்ற அரசு அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை இந்த வருடமாவது தீபஒளியை பார்த்து விடலாம் என்ற எண்ணத்தில் ஆவலுடன் இருந்த முருகப்பக்தரான பூர்ணச்சந்திரன் என்பவர் தீபம் ஏற்றாததை வருந்தி தனது உடலில் தீயை வைத்து கொண்டு உயிரை மாய்த்து கொண்டார்.இந்த இறப்பிற்கு காரணமாக இருந்தது அன்றைய திமுக அரசாங்கம்.

இவ்வழக்கு கடந்த 4-ம் தேதி மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென தனிநீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது? என்றும்,வழக்கில் அரசின் நிலைபாடு என்ன? என்பதை வருகின்ற 24-ம் தேதிக்குள் இந்நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டுமென இன்றைய தவெக அரசிடம் நீதிபதிகள் கூறிஉள்ளார்கள்.

மேலும் திருப்பரங்குன்றம் மலை முழுவதும் அளவீடு செய்து அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் தொல்லியல்துறைக்கு உத்தரவிட்டதின் அடிப்படையில் தொல்லியல் துறை அதிகாரிகள் தற்போது மலையை அளவீடு பணி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்றைய முன்தினம் தமிழக சட்டத்துறை அமைச்சராக இருக்கும் நிர்மல் குமார் தலைமையில் மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியாளரையும்,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் உடன் வைத்து கொண்டு திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்றும்,மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்றும்,தமிழக அரசின் கொள்கையும் அதுதான் என்றும் இந்துவிரோத திமுக அரசை போல் புதிதாக ஆட்சிக்கு வந்த தவெகவில் சட்டத்துறை அமைச்சராக இருந்து கொண்டு முருகப்பக்தர்கள் மனதை புண்படுத்தும் விதமாக தான்தோன்றி தனமாக பொருப்பற்ற முறையில் பேசிய அமைச்சர் நிர்மல் குமாரை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தீபத்தூண் விவகாரம் அரசின் நிலைபாடு என்ன என்பதை நீதிஅரசர்கள் உத்தரவிட்ட நிலையில் அரசின் நிலைபாட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்காமல் பொது வெளியில் தெரியப்படுத்துவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் அல்லவா என்று கூட சட்டம் படித்தவர் என்று கூறிகொள்ளும் சட்டத்துறை அமைச்சருக்கு தெரியாதா?

இதுபோல கடந்த திமு ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி அவர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றும் தீர்ப்பினை விமர்ச்சித்து பேசியதால் உயர்நீதிமன்றத்தில் ரகுபதி அசிங்கப்பட்டு குட்டு வாங்கினார் என்பதை நிர்மல் குமார் நினைவில் வைத்து கொள்ளவேண்டும்.

தீபத்தூண் தீபம் ஏற்று விவகாரத்தில் நீதிமன்றத்தில் அரசு நிலைபாடு என்ன என்று தெரிவிக்காமல் பொது வெளியில் சட்டத்துறை அமைச்சர் தீபத்தூணில் தீபம் ஏற்ற மாட்டோம் கூறுவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும் மட்டுமல்ல இந்துக்களின் மனதை புண்படுத்தும் செயலாகும்.

கடந்த 1995ல் மதுரை மாவட்ட அரசு அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற சமாதன கூட்டத்தில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவிற்கு இடையூறு இல்லாமல் 50 மீட்டர் அப்பாற்பட்டு தொலைவில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று தீபம் ஏற்றவதற்கு எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனை இல்லை என்று சிக்கந்தர் தர்ஹா நிர்வாகம் சார்பில் கையெழுத்திட்டு மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் தீபம் ஏற்றுவதை தர்ஹா நிர்வாகம் அப்பொழுது வரவேற்றார்கள்.

ஆனால் அதனை சீர்குழைக்கும் வகையில் பிஎப்ஐ அமைப்பை சார்ந்த மதவெறி சக்திகள் தர்ஹா நிர்வாகத்தில் பொருப்பாளர்களாக ஊடுறவி முருகப்பெருமானுக்கு சொந்தமான ஸ்ரீகந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றுவதற்கு முயற்சித்தார்கள்.
அந்த அமைப்பு தேசவிரோத மத பயங்கரவாத அமைப்பாக செயல்பட்டதால் பிஎப்ஐ அமைப்பை இந்தியா அரசாங்கம் தடை செய்தது.

அதன் பிறகு பிஎப்ஐயின் அரசியல் பிரிவான எஸ்டிபிஐ கட்சியை சார்ந்தவர்கள் தர்ஹா நிர்வாகத்தில் முழுமையாக ஊடுறவி புனிதமான மலை மீது ஆடு கோழி பலியிடுவதற்கும்,மலை மீதுள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீது பச்சை பெயிண்ட் அடித்து சிக்கந்தர் அலி தொழுகை செய்த இடம் என்று எழுதபட்டும்,தீர்த்த சுனைகளை ஆக்கிரமித்தும்,திருப்பரங்குன்றம் மலையே தர்ஹாவுக்கு சொந்தம் என்றும்,தீபத்தூணில் தீபம் ஏற்றக்கூடாதென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் முருகப்பெருமானின் மலையை அபகரிக்கும் நோக்கத்தோடு பல்வேறு இடையூறுகளையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.அதற்கு உடந்தையாக கம்யூனிஸ்ட் போன்ற நக்சல் அமைப்புகளும்,திராவிட அமைப்புகளும்,பிரிவினைவாத சக்திகளும் தீபத்தூண் தீபம் ஏற்றுவதற்கு எதிரா சதி வேலையில் ஈடுபட்டு வந்தார்கள் என்பது தான் உண்மை.

தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டுமென்று திருப்பரங்குன்றம் ஊர்மக்கள் உண்ணாவிரதம்,கடைஅடைப்பு மற்றும் அறவழி போராட்டங்கள் எல்லாம் இன்றைய வரையில் நடத்தி வருகிறார்கள்.
அப்படி இருக்கையில்
தீபம் ஏற்றும் விவகாரத்தில் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்ற காரணத்தினால் எப்பொழுதும் போல் இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்படும் என்று அமைச்சர் கூறிய அமைதியை விரும்பும் அந்த மக்கள் யார் என்று தெளிவுபடுத்த வேண்டும்.

தீபம் ஏற்றினால் கலவர பூமியாக மாறும் என்று அரசியல் வியாபாரம் செய்யும் கம்யூனிஸ்ட் விசிக,இஸ்லாமிய அடிப்படைவாத மத பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டு வைத்து கிட்டு மதவாத சக்திகள் அரசியல் செய்ய அரசு அனுமதிக்காது என்று அமைச்சர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

கடந்த ஆட்சியில் முருகப்பக்தர்களின் கோரிக்கையை ஏற்காமலும்,நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமலும் திமுக செய்த அதே தவறை தற்போது தவெக அரசு செய்ய முயற்சிப்பதை பார்த்தால் நடிகர் ஜோசப் விஜய் தலைமையில் இயங்கக்கூடிய தவெகவும் இந்து விரோத அரசாக செயல்படுவது போல் சந்தேகம் எழுகிறது.

தமிழகத்தில் மாற்றத்திற்கு உண்டான அனைவருக்குமான மதசார்பற்ற ஆட்சியை நடத்துவேன் என்று கூறிய கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஜோசப் விஜய் ஆட்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் இந்துக்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை பறிக்கும் விதமாகவும் ,நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் விதமாகவும் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு தமிழக முதல்வராக இருக்கும் திரு.ஜோசப் விஜய் அவர்களின் நிலைபாடு என்ன என்று தெரிவிக்க வேண்டும்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் அவர்களின் முகத்திற்காகவும்,மாற்றத்திற்காகவும் மட்டுமே திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நிர்மல் குமாருக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தார்களே தவிர தொகுதிக்கு யார் என்று தெரியாத நிர்மல் குமாருக்கு அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

தீபத்தூணை பற்றி வரலாறு தெரியாமல் தீபத்தூணில் தீபம் ஏற்றமாட்டோம் இப்போது கூறியது போல் தேர்தல் பிரச்சாரத்தில் நிர்மல்குமார் கூறி இருந்தால் இன்று தவெக ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திருக்காது.

இந்துமத கடவுள் நம்பிக்கை இல்லாத தீபத்தூண் விவகாரத்தில் அன்று முதல் இன்று வரை இந்து முஸ்லிம் ஒற்றுமை மதநல்லிணக்கத்தை சீர்குழைக்கும் விதமாக மத அரசியல் செய்து வரும் கம்யூனிஸ்ட்,விசிக,முஸ்லிம் அமைப்புகள் போன்ற மதபிரிவினைவாத சக்திகளின் அலுத்தத்தின் காரணமாக அமைச்சர் பேசுவது விஜய் ஆட்சிக்கும் தவெக கட்சிக்கும் ஒட்டுமொத்த இந்துக்களின் மத்தியில் கெட்டப்பெயரை உண்டாக்கும்.அதற்கு ஜோசப்விஜய் தலைமையில் நடக்கும் தமிழக அரசு துணைபோக கூடாது.

ஆகவே ஜோசப்விஜய் அவர்கள் தவெக கட்சி வெற்றி பெற்ற வேண்டு மென்பதற்காக திருச்செந்தூர் திருக்கோயிலில் யாகம் வளர்த்து முருகனின் வேலை கையில் தூக்கிய காரணத்தினால் தான் முருகபெருமானின் ஆசியோடு தாங்கள் முதலமைச்சராக ஆட்சியில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை மனதில் வைத்து கொண்டு அறுபடைவீடுகளில் முதற்படை வீடான தமிழ் கடவுள் முருகப் பெருமானின் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காலம் காலமாக தீபம் ஏற்றப்பட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்பது இந்துக்களின் பல காலமான கனவுகளையும்,பக்தர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதித்து மக்கள் விருப்பத்தை ஏற்று வருகின்ற கார்த்திகை தீபத்திருநாளன்று உயர்நீதிமன்ற உத்தரவு படி தீபத்தூணில் மஹாதீபம் ஏற்ற தமிழக முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் அரசாங்கமாவது நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

மேலும் தீயசக்தி திமுக ஆட்சியில் செய்தது போல் சிலரது மனதை குளிர வைப்பதற்காக கம்யூனிஸ்ட் போன்ற தேசவிரோத மதபிரிவினைவாத தீயசக்திகளின் தூண்டுதலின் பேரில் தீபத்தூணில் தீபம் ஏற்றமாட்டோம் என்று நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும்,இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாகவும், இந்துக்களின் மதவழிபாட்டு உரிமையை பறிக்கும் விதமாகவும்,தவெக அரசாங்கத்திற்கு கெட்டபெயரை உண்டாக்கும் வகையில் சட்டத்தை மதிக்க கூடிய ஒரு சட்டத்துறை அமைச்சர் பொருப்பில் இருந்து கொண்டு பொருப்பற்ற தன்மையில் பேசிய அமைச்சர் பதவிக்கே தகுதி இல்லாத நிர்மல்குமாரை சட்டத்துறை அமைச்சர் பதவியில் உடனடியாக நீக்கவேண்டும். இல்லையென்றால் மசார்பற்ற அரசு என்று கூறிவிட்டு சர்ச்,மசூதிகளை விட்டுவிட்டு இந்து வழிபாட்டு தலங்களை மட்டும் குறிவைத்து தமிழகஅரசு ஆக்கிரமித்து கொண்டு இந்துக்களின் மத வழிபாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் இந்துகளுக்கு விரோதியாக செயல்படும் நிர்மல்குமாரையும்,தமிழக அரசையும் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என்பதை இந்த அறிக்கையின் மூலமாக தமிழக முதல்வருக்கும்,தமிழக அரசுக்கும் இந்துமக்கள்கட்சி மற்றும் முருகப்பக்தர்கள் சார்பில் இக்கோரிக்கையை சமர்பிக்கப்படுகிறது.