இராஜபாளையம் சித்ரா ஆஸ்பத்திரியில் ஒரே ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட இருதய மற்றும் மார்பக திறந்த இருதய அறுவை சிகிச்சைகளில் இறப்பு கிருமி தொற்று இல்லாமல் சாதனை செய்துள்ளதாக டாக்டர் கோபால முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிகிச்சை பெற்றவர்கள் முன்பு செய்தியாளரிடம் கூறியதாவது.

இராஜபாளையத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சித்ரா ஆஸ்பத்திரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விரிவாக்கம் செய்து இருதயவியல் அறுவை சிகிச்சை பிரிவு துவங்கி தற்போது மல்டி ஸ்பெஷாலிட்டி மாவட்டத்தில் 24 மணி நேர இருதய அறுவை சிகிச்சை மையமாக திகழ்கிறது.
ஆபத்து நிறைந்த கிருமி தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள இருதய மற்றும் மார்பக திறந்த அறுவை சிகிச்சையில் 100-க்கும் அதிகமாக செய்து கிருமி தொற்று, உயிர் இழப்பு ஏற்படாமல் செய்துள்ளது.
இங்கு கொரோனரி தமனி பைபாஸ் கிராப்டிங், வால்வு மாற்று, ஏட்ரியல் செப்டல் டிபக்ட் மூடல்கள், சிக்கலான பெருநாடி நிலைமைகளுக்கான பென்டால் அறுவை சிகிச்சை, மையோக்சோமா அகற்றல் ஆகிய சிகிச்சைகளை அதிநவீன உட் கட்டமைப்பு தொழில் நுட்ப கருவிகளுடன் வழங்குகிறோம்.
இதற்கு பெயர் பெற்ற மருத்துவ நிபுணர்கள் குழு நவீன அறுவை சிகிச்சை 24 மணி நேர இருதய தீவிர சிகிச்சை பிரிவு பல்துறை வல்லுநர்களின் கூட்டுப் பணியால் சாத்தியமாகி உள்ளது என்றார். உடன் இருதய அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் பிரசாந்த் வைஜயநாத், மருத்துவர்கள் ஜாஹ்னவிசுவராஜு, சித்தார்த், ரமேஷ், பிந்தியா, ஞானகுரு ஆகியோர் உள்ளனர்.




