சமூகத்தில் அனைவரையும் போலவும் மாற்றுத்திறனாளிகளும் வாகனங்கள் ஓட்டுவதற்கு ஆசைப்படுவார்கள். அது அவர்களது உரிமை. அதே நேரத்தில் கடந்த காலத்தில் அவர்களுக்கு அவர்கள் வசதிக்கேற்ப வாகனங்கள் இருந்தனவா என்றால் அது மிகவும் குறைவுதான்.

அந்த வகையில் தான் பல மாற்றுத்திறனாளிகள் (அவர்கள் பலவகையில் இருக்கிறார்கள் என்ற போதிலும் அனைவரையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடும் வகையில் மாற்றுத்திறனாளிகள் என்று திமுக அரசு ஏற்படுத்தி வைத்திருந்தது. அதனால் செவித்திறன் குறைந்திருந்தாலும் பார்வை திறன் குறைந்து இருந்தாலும் கை கால்கள் ஊனமுற்றிருந்தாலும் வாய் பேச முடியாமல் இருந்தாலும் அனைவரையும் மாற்றுத் திறனாளிகள் என்று அழைக்கப் படுகிறார்கள்) இருக்கிறார்கள்.
அந்த வகையில் மற்றவர்களைப் போல வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் ஸ்கூட்டர், டிவிஎஸ் 50 போன்ற வாகனங்களை வாங்கி பின் சக்கரத்தில் லேத் பட்டறையில் கொடுத்து கூடுதலாக இரண்டு சக்கரங்களை பக்கவாட்டில் இணைத்து தங்கள் வசதிக்கேற்ப வண்டிகளை உருவாக்கி ஓட்டி வந்தார்கள். இது அவர்களுக்கு அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட வசதியாகும். இதை கண்ணுற்ற அரசு அவர்களுக்கென்று வாகனங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து என்று சமூகத்தில் தென்படும் அத்தனை வாகனங்களும் கிட்டத்தட்ட கடந்த திமுக அரசாங்கத்தால் வழங்கப்பட்டவையாக இருக்கின்றன.

அதிமுக அரசாங்கத்தில் பெண்களுக்கு அதிகளவில் ஸ்கூட்டர்கள் வழங்கி அவர்களை சாலைகளில் ஆண்களுக்கு இணையாக ஓட்ட வைத்த பெருமை அதிமுக அரசுக்கு உண்டு. இந்த நிலையில் தான் அண்மையில் நடைபெற்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற போது தமிழக வெற்றி கழகத்தினர் புதுக்கோட்டையில் மாலையீடு பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் பாண்டி, அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வரும் பழனியாகி தம்பதியினரின் மகன் சபரி வாசன் என்பவர் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார் என்பதை அறிந்தும் அவருக்கென்று ஒரு நல்ல வண்டி வாங்கி கொடுக்க முடியாத நிலையில் இந்த தம்பதியினர் இருக்கிறார்கள் என்பதையும் தமிழக வெற்றி கழகத்தினர் அறிந்தனர்.
மேலும் வெற்றி பெற்ற பிறகு தங்களுக்கு வண்டி வாங்கித் தருகிறோம் என்று உத்தரவாதமும் கொடுத்து விட்டு வந்திருக்கிறார்கள். தற்போது தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மில்லர், மாநகரச் செயலாளர் ராஜா முகமது, உள்ளிட்ட இன்னும் சில வட்டக் கழகச் செயலாளர்களும் இணைந்து சபரி வாசனுக்கு சுமார் 8000 ரூபாய் மதிப்புள்ள மாற்றுத்திறனாளிக்கான ஒரு வண்டியை வாங்கி அதை சபரி வாசனின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாலையீடு முக்கம் என்ற பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், எனது ஆட்டோ முழுவதும் விசில் வாங்கி ஒட்டி வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே பரபரப்பை ஏற்படுத்திய மேட்டுப்பட்டி மில்லர், மாநகரச் செயலாளர் ராஜா முகமது, வட்டச் செயலாளர் சுமதி பாலகிருஷ்ணன், மகளிர் அணி இணை அமைப்பாளர் அழகு மீனா, ராஜா முருகப்பன், ரவிச்சந்திரன், செல்லம்மாள் முத்து, ராஜசேகரன், தினேஷ், அப்துல் ரகுமான், கார்த்திக் உள்ளிட்ட தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு இந்த வாகனத்தை வழங்கியதோடு தங்களால் இயன்ற நிதி உதவியையும் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




