• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த ஜி.என்.எஸ். ராஜசேகரன்..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 4, 2026

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட 20 பாசன வாய்க்கால்களை 2026-27 ஆம் ஆண்டிற்கான தார்வாரும் பணிகள் ரூ.49.10 லட்சம் மதிப்பீட்டில் இன்று தொடங்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின் மூலம் திருநள்ளாறு தொகுதியில் உள்ள நல்லம்பல் வாய்க்கால், நல்லெழுந்தூர் வாய்க்கால், நெல்லி வாய்க்கால், பண்ணைக் கொள்ளை வாய்க்கால், பத்தக்குடி வாய்க்கால் உள்ளிட்ட மொத்தம் 110 கிலோமீட்டர் நீளமுள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 4125 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயிகள் பெரிதும் பயன்பெற உள்ளனர்.

பூமி பூஜையுடன் பணிகளைத் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் கலந்து கொண்டார். நிகழ்வில் காரைக்கால் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீர்ப்பாசன மற்றும் பொதுக்கட்டமைப்பு துறை பொறியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.