2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய மாவட்ட செயலாளராக பழனிவேல் நியமிக்கப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மாவட்ட அலுவலகம் பூட்டப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகம் கடந்த 20 நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் நேற்று போட்டாச்சியர் அலுவலகத்தில் இபிஎஸ் மற்றும் விஜயபாஸ்கர் தரப்பு சார்பில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் விஜயபாஸ்கர் தரப்பில் ஒருவர் கூட பங்கேற்காத நிலையில் அப்போது இபிஎஸ் தரப்பு தங்களிடம் சாவியை ஒப்படைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் விஜயபாஸ்கர் தரப்பு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் தரப்பிடம் அதிமுக மாவட்ட அலுவலக சாவியை ஒப்படைத்தனர். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகம் வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேலு தலைமையில் திறக்கப்பட்டது. மேள தாளங்கள் முழங்க வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேலுக்கு உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது.



