திருமயம் அருகே ராங்கியத்தில அழகிய. நாச்சியம்மன் திருக்கோயில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழா காப்புக்கட்டும் வைபவத்துடன் 25ம் தேதி தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதி உலா நடந்தது. கோவிலில் முக்கியமான விழாவான தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

பின்னர் தேர்க் காலுக்கு சிறப்புப் பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து ராங்கியம், அதனைச் சுற்றியுள்ள கிராம முக்கியஸ்தர்கள், நாட்டு அம்பலம் ஆகியோர் வடம் பிடிக்க தேரோட்டம் சரியாக தொடங்கியது. தேர் கோயிலைச்சுற்றி 4 வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களின் கோலாகலமான வரவேற்பு மற்றும் வழிபாட்டுக்குப் பிறகு நிலைக்கு வந்தது. வழி நெடுக அம்மனுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். முன்னதாக 501 மகளிர் கோயில் வாசலில் பொங்கலிட்டு. அம்மனை வழிபாடு செய்தனர். பிரார்த்தனை பக்தர்கள் பால் குடம் எடுத்துவந்தனர்.
விழாவில் திருமயம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அழ.ராமு, ஆணையர் பால்பிரான்சிஸ், டிஎஸ்பி சரவணன், உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். பனையப்பட்டி இன்ஸ்பெக்டர் அழகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதே போல. அரிமளம் ஒன்றியம் கீழப்பனையூர் காமாட்சியம்மன் கோயிலிலும் தேரோட்டத்திருவிழா நடைபெற்றது.



