• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா..,

சோழவந்தான் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைமதுரை கிழக்கு த் தொகுதி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கச்சைகட்டி சாலையில்தாதம்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக உள்ளது.

இதன்திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு தமிழகசட்ட மன்றத்தின் தற்காலிக சபாநாயகரும் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.வீ. கருப்பையா தலைமை தாங்கினார். இந்த அலுவலகத்தை மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ரிப்பன் வெட்டிதிறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார். அதன் பின் எம்.எல்.ஏ.,கருப்பையாவை எம்.எல்.ஏ., கார்த்திகேயன் சட்டமன்ற உறுப்பினர் இருக்கையில் அமர வைத்தார்.இதில் இருவருக்கும் கட்சி நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் மாலை,சால்வை அணிவித்துமரியாதை செய்து வீரவாள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினார்.

இதில் தமிழக வெற்றிக்காக மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணன்,வழக்கறிஞர்கள் அழகேசன், தியாகராஜன்,பேரூர் செயலாளர் பசுமணியன் ஒன்றிய செயலாளர் தமிழன் தாமு மற்றும் ராஜேந்திரன், மதுசூதனன், ஹரி, உள்ளிட்ட பேரூர் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகி கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.