• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வைரலாகிவரும் விஜய்- யுவன் புகைப்படம்

விஜய்யுடன் இருக்கும் புதிய படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா கடந்த 25ஆண்டுகளில்இதுவரை விஜய்யுடன் ஒரேயொரு படத்தில்தான் பணியாற்றி இருக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான், அனிருத் என பலருடன் மீண்டும் மீண்டும் விஜய் பணியாற்றினாலும் யுவன் ஷங்கர் ராஜா – விஜய் கூட்டணி மீண்டும் இணையவில்லை.


விஜய்க்கு இணையாக முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் ‘தீனா’, ‘பில்லா’, ‘பில்லா 2’, ‘ஏகன்’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ என தொடர்ந்து பணியாற்றி வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. ஆனால், விஜய் படத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெகன் இயக்கத்தில் வெளியான ‘புதிய கீதை’ படத்தைத் தவிர இதுவரை யுவன் பணியாற்றவில்லை.

கடந்த 17 ஆண்டுகளாக இக்கூட்டணி மீண்டும் இணையவில்லைஇந்த நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய்யுடன் உற்சாகமுடன் இருக்கும் புகைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்திருகிறார். டிவிட்டர் ட்ரெண்டிங்கில் வைரலாகிக்கொண்டு வருகிறது இந்தப் புகைப்படம். அதேசமயம், விஜய்யின் ‘விஜய் 66’ அல்லது ‘விஜய் 67’ படத்தில் யுவன் பணியாற்றுகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.