• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

கோவையில் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் 3D பிரிண்டெட் செயற்கைக் கால் அளவீட்டு முகாம்..,

BySeenu

May 25, 2026

நாராயண் சேவா சன்ஸ்தான் மற்றும் சூரத் டி.எம். பட்டேல் குடும்ப அறக்கட்டளை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச திருத்து அறுவை சிகிச்சை பரிசோதனை, தேர்வு மற்றும் 3D பிரிண்டெட் நாராயண் மாடுலர் செயற்கைக் கால் அளவீட்டு முகாம் கோவை சோமையம்பாளையம் மகேஷ்வரி பவனில் நடைபெற்றது…

முகாமில் 515-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 411 பேருக்கு செயற்கைக் கால்கள் மற்றும் காலிப்பர்களுக்கான அளவீடுகள் எடுக்கப்பட்டதுடன், 10 பேர் இலவச திருத்து அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

முகாமை ஹரிஷ்பாய் டி. பட்டேல் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை இறைசேவைக்கு சமம் என பாராட்டினார்.

நிகழ்ச்சிக்கு மகேஷ்வரி சபா தலைவர் கோபால்ஜி மகேஷ்வரி தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் ராஜஸ்தானி சங்க தலைவர் சந்தோஷ் மூந்த்ரா, மகாவீர் கௌசாலா தலைவர் பிரசன்ன கோத்தாரி, சதீஷ் மிட்டல், பிரஃபுல்பாய் சேஜ்பால், மாணக் பண்டாரி, ஜோரா ராம் பட்டேல், மகேஷ் அகர்வால், விகாஸ் தாரிவால், கமல் பண்டாரி, தினேஷ் ஸ்ரிமாலி, கமல் கிஷோர் அகர்வால், ஆஷிஷ் போஹ்ரா, தருண் ரங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முகாம் ஒருங்கிணைப்பாளர்களான அச்சல் சிங் பாட்டி மற்றும் ஹரி பிரசாத் லத்தா ஆகியோர், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அடுத்த 1 முதல் 2 மாதங்களில் மீண்டும் கோவையில் இலவசமாக நாராயண் செயற்கைக் கால்கள் பொருத்தப்படும் என்று தெரிவித்தனர்.

ஜப்பான் மற்றும் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இச்செயற்கைக் கால்கள் எடை குறைவாகவும், எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் இனி தங்களால் எளிதில் எல்லோரையும் போல இயங்க முடியும் என மகிழ்ச்சி தெரிவித்தனர்…