புதுக்கோட்டையில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் முன் வைக்கப்பட்டது.
குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜி. எஸ்.தனபதி விடுத்துள்ள கோரிக்கையில்

1) தமிழகத்தில் புதிய கூட்டணி அரசு பதவியேற்றுள்ளமைக்கு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் சார்பில் வாழ்த்துகிறோம். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், பொதுமக்களின் முக்கிய கோரிக்கையான காவிரி-வைகை குண்டாறு கடந்த அரசு 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட காவிரி இணைப்புத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்
2) அண்டக்குளம்,
மின்பிரிவு அலுவலகத்தில் தேவையான உதவிப் பொறியாளர் முதல் கம்பியாளர் வரை 10 காலிப்பணியிடம் கடந்த இரண்டு ஆண்டாக நிறப்பப்படாமல் உள்ளது. இதனால் அண்டக்குளம்- முதல் வைத்தூர் பகுதி வரை லேசான காற்றடித்தால் மின்சாரம் தடைபட்டு விடுகிறது அவற்றை பழுதுநீக்கி மீண்டும் மின் இணைப்பு கிடைப்பதற்கு பல மணி நேரம் ஆகிறது. எனவே விவசாயிகளுக்கும் குடி தண்ணீர் கிடைப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது இதனை போக்க உடனடியாக நிறந்தரப்பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்,
3) கூட்டறவு விவசாய பயிர்க்கடன் திரும்பச் செலுத்தும் காலம் வந்துவிட்டது புதியஅரசு கடன் தள்ளுபடி திட்டம் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது,
அது பற்றி அரசுக்கு கடிதம் எழுதி தெளிவான அறிக்கை உடனடியாக வெளியிட வேண்டும்,
4) 15.03.2026,மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்தில் வேலிக்கருவேல் அகற்ற உத்தரவிட்டுள்ளது அதன்படி மாவட்ட அளவில் ஒருகண்காணிப்புக்குழுவும் வட்டார அளவில் ஒரு கண்காணிப்புக் குழுவும் அமைத்து இந்த கோடை காலத்தில் விரைவாக அகற்ற நடவடிக்கை எடுத்து விரைந்து செயல்படுத்த வேண்டும் ,
இந்த கோரிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.





