தமிழகத்தில் திமுக அதிமுக என திராவிட ஆட்சிகளுக்கு எதிராக கடந்த எழுபது ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக தமிழக வெற்றிகழகம் என்ற பெயரில் நடிகர் ஜோசப்விஜய் தலைமையில் ஒரு மாற்று ஆட்சி ஏற்பட்டு திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத்தொகுதியில் தவெக வேட்பாளராக வெற்றி பெற்ற பிராமண சமூகத்தை சேர்ந்த மாண்புமிகு ரமேஷ் அவர்களை தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளதை இந்துமக்கள்கட்சி வாழ்த்தி வரவேற்கிறது.

கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திராவிடர் கழகத்தை சேர்ந்த வீரமணி அவர்கள் ஒரு பிராமணரை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாதிய வன்மத்தோடு பிராமண துவேசம் செய்வதை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதாவது ஜோசப் விஜய்க்கு எதிராகவும் திமுகவிற்கு ஆதரவாகவும் தேர்தல் பிரச்சாரம் செய்தவர் தான் இந்த வீரமணி.
தேர்தல் நேரத்தில் தவெகவை எதிர்த்து விட்டு இன்று தவெக வென்ற பின்பு இந்த சாதியினர் தான் அமைச்சராகவும்,அதிகாரியாகவும் இருக்கவேண்டுமென ஜோசப்விஜய் அரசுக்கு உத்தரவு போட வீரமணிக்கு என்ன அதிகாரமும் தகுதியும் இருக்கிறது?வீரமணி அவர்களுக்கே கேவலமாக இல்லை.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், அமைச்சராகலாம் போது இனிக்குது.ஆனால் பிராமண சமூகம் அமைச்சரானால் மட்டும் வீரமணிக்கு ஏன் கசக்குது?
கடவுளை வணங்குபவன் முட்டாள் என கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட வீரமணிக்கு திருக்கோயில்களை நிர்வாகம் செய்யும் இந்துசமய அறநிலையத்துறைக்கு யாரை அமைச்சராக்கினால் வீரமணிக்கு என்ன பிரச்சனை?
இந்துசமயஅறநிலையத்துறையில் பிராமணரை அமைச்சராக்கினால் எதற்காக வீரமணி பதற்றப்டுகிறார்?
தமிழகத்தில் அரை சதவிதம் வாக்கு வைத்திருக்கும் திராவிடர் கழக வாக்காளர்களை விட 20 சதவிதம் வாக்கு வங்கி வைத்திருக்கும் பிராமணர்கள் அமைச்சராகவோ, அதிகாரியாகவோ ஆகக் கூடாதா?
மதத்தில் சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் அமைச்சராகும் போது, சாதிய சமூகத்தில் சிறுபான்மையாக இருக்கும் பிராமணர்கள் அமைச்சராக இருக்க கூடாதென்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா?
பிராமணர்கள் வாக்கு மட்டும் வேண்டும். ஆனால் ஒரு பிராமணர் அமைச்சரானால் மட்டும் அது ஆதிக்க சாதி என்று எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்?
சமூகநீதி சமத்துவம்,பெண்ணுரிமை, சாதி தீண்டாமை ஒழிப்பு என்று வாய்கிழிய பேசும் வீரமணி அவர்கள் பல்லாயிரம் கோடி சொத்துள்ள பெரியார் அறக்கட்டளையை அன்றைய முதல் இன்றைய வரைக்கும் நிர்வாகம் செய்து வருவது வீரமணியும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே தவிர தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த ஒருவரையோ அல்லது பெண்ணையோ கூட அறக்கட்டளையின் தலைவராக நியமனம் செய்யாதது ஏன்? என்று வீரமணி விளக்கம் அளிப்பாரா?
கிறிஸ்தவ இஸ்லாமிய வழிபாட்டு தலங்களை தவிர இந்து திருக்கோவில் வழிபாட்டுதலங்களுக்கு முன்பாக மட்டும் கடவுளை மற மனிதனை நினை என்ற வாசகத்துடன் ஈவேரா சிலையை வைத்துவிட்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்,தமிழில் தான் அர்ச்சனை செய்யவேண்டும், பார்ப்பனர்கள் அமைச்சராக கூடாதென சொல்வதற்கு முதலில் வீரமணி யார்?
திருக்கோவில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளின் நிர்வாகத்தில் தலையிட என்ன சம்மந்தம்?

கடவுளை (கல்லை) வணங்குபவன் காட்டுமிராண்டி என்று கூறிவிட்டு திருக்கோயில்களில் எந்தமொழியில் அர்ச்சனை செய்தால் என்ன?எந்த சாதியினரும் அர்ச்சகர்களாக இருந்தால் என்ன?எந்த சாதியினரும் அமைச்சராக இருந்தால் வீரமணிக்கு என்ன?
கடந்த அதிமுக ஆட்சியில் பிராமணர் சமூகத்தை சேர்ந்த முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களை அன்று சமூகநீதி காத்த வீரமங்கை என பட்டம் சூட்டிவிட்டு தற்போது பிராமணர் ஒருவர் அமைச்சரானதற்கு வீரமணி எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாகவும், கேலி கூத்தாகவும் இருக்கிறது.
பிராமண சமூக மக்களால் கி.வீரமணியோ அல்லது அவரது குடும்பத்தார்களோ ஏதேனும் பாதிப்பு அடைந்தார்களா என்று தெரியவில்லை.எப்போ பார்த்தாலும் பிராமணர்களை கண்டால் அய்யய்யோ பார்பனன் என்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் வீரமணி உலறி வருகிறார்.வயது முதிர்ந்தாலும் வீரமணிக்கு வாய் கொழுப்பு மாறவில்லை.
தமிழை வளர்த்ததும்,தமிழ் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அதீத அன்பும் பண்பும் பற்று கொண்டவர்கள் தான் பிராமணர்கள்.அப்படிபட்ட பிராமண சமூகத்தை எதிர்ப்பவர்கள் யார் என்று பார்த்தால் தமிழன் என்ற போர்வையில் ஒழிந்திருக்கும் தமிழீன விரோத திராவிட போலி நாத்தீக கும்பல் மற்றும் போலி பிரிவினைவாத தமிழின போராளிகள் தான்.
நாயையும் நாத்தீகனையும் கண்டால் நாயை விட்டுவிட்டு வீரமணியை போல் போலி நாத்திகர்களை கண்டால் தமிழகத்தல் இருந்தே விரட்ட வேண்டும்.அதற்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.
தமிழகத்திற்கு மட்டும் சுதந்திரம் வேண்டாமென்று ஆங்கிலேயர்களுக்கு அடிவருடகளாக இருந்த திராவிடர் கழக கூட்டங்களுக்கு ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரத்திற்காக பல்வேறு தியாகங்கள் செய்த பிராமணர்கள் அமைச்சராவதை கண்டால் வீரமணி போன்றவர்கள் அஞ்சி நடுங்க தான் செய்வார்கள்.
இந்த ஜனநாயக மதசார்பற்ற நாட்டில் இந்நாட்டின் குடிமகனாகவும்,இந்த நாட்டை நேசிக்க கூடியவர்களாகவும் இருக்கும் பிராமணர்கள் அமைச்சராக இருக்க அனைத்து தகுதியும் உரிமையும் இருக்கிறது.
பிராமணர்கள் எந்த ஒரு சமூகத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானவர்களோ,தாழ்த்தி பேசியவர்களோ அல்ல.எந்த ஒரு தவறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டதும் அல்ல.ஆனால் சமூகநீதி சமத்துவம் என்ற பெயரில் பிராமணர் சமூகத்தை மட்டும் அவமதிக்கும் வகையிலும் இழிவுபடுத்தும் விதமாகவும் பிராமணர்களை குறிவைத்து வேண்டுமென்றே திட்டமிட்டு பிராமணர்கள் மீது வீரமணி போன்றோர்கள் வன்மத்தை கக்கி வருகிறார்கள்.
இந்துமத சாஸ்திர சம்பிரதாய சடங்குகளுக்கும்,மரபுகளுக்கும் இந்து மத வழிபாட்டிற்கும் இந்துசனாதன தர்மத்திற்கும் ஒரு தூணாக இருக்கக்கூடியவர்கள் தான் பிராமணர் சமுதாயம்.அந்த சமுதாயத்தை அழித்தால் மட்டுமே இந்து சனாதன தர்மத்தை அழிக்க முடியும் என்ற நோக்கத்தோடு தான் பிரமாண சமூகத்திற்கு எதிரான கி.வீரமணி போன்றோர்களின் பிராமண துவேச பேச்சு.
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் இந்த திராவிட நாத்திக கும்பல்களால் பிராமணர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.அதனால் பிராமணர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் திருக்குலத்தோர் மக்களை பாதுகாக்க சட்டம் இருப்பதை போல் பிராமணர் சமூகத்தை யாரெனும் தவறாகவோ இழிவாகவோ பேசினால் உடனே தண்டிக்கும் வகையில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டுமென மதுரை உள்பட தமிழக முழுவதும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பிராமணர்களுக்கு ஆதரவாக எப்பொழுதும் இந்துமக்கள்கட்சி உடன் இருக்கும்.
ஆகவே தமிழக அரசு அதிகாரியாக ஒரு பிராமணரை நியமனம் செய்யும் போது வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார்.தற்போது இந்துசமய அறநிலையத்துறைக்கு ஒரு பிராமணரை அமைச்சராக நியமனம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பிராமணர் துவேசமாகும். இந்த இந்துவிரோத பிராமண எதிர்ப்பு கும்பல்களின் எதிர்பை கண்டு தமிழக அரசும் தமிழக முதல்வரும் அஞ்சவேண்டாம். பிராமணர் சமூகத்தை சேர்ந்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரையும்,அதிகாரிகளையும் எக்காரணத்தை கொண்டும் மாற்றம் செய்யக்கூடாது.
எந்த ஒரு சாதியையும் குறிப்பிட்டு இழிவுபடுத்தி பேசக்கூடாதென்று சட்டம் இருந்தும் சாதிய ரீதியாக சிறுபான்மையினராக இருக்கும் பிராமணர் சமுகத்திற்கு எதிராகவும்,சாதிய பிரச்சனை தூண்டும் விதமாகவும் பிராமணர்கள் மீது வெருப்பு அரசியலை தொடர்ந்து செய்து வரும் திராவிடர் கழகத்தலைவர் போர்வையில் ஒந்திருக்கும் போலி நாத்திகவாதி கி.வீரமணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்.
இந்திய தேசத்திற்கும் இந்து சமயத்திற்கும் ,இந்திய சட்டத்திட்டங்களுக்கு எதிராகவும்,
சாதி,மொழி,இன பிரிவினையை தூண்டும் விதமாகவும்,தேசவிரோத மத பயங்கரவாத சக்திகளுக்கும் மதமாற்றம் செய்யும் கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் தேசவிரோத நக்சல் அமைப்பின் மறுவடிவமான திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும்.
மேலும் பெரியார் சேர்த்து வைத்த பல்லாயிரம் கோடிரூபாய் சொத்தில் இருந்து தமிழக மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் நிதி உதவியும் செய்யாமல் பெரியார் சொத்துக்களை திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி மற்றும் அவரது குடும்பம் மட்டும் சுபயோகமாக அனுபவித்து வருகிறார்கள்.
தமிழக மக்களுக்காக பெரியார் உழைத்தது உண்மை என்றால், பெரியார் அனைவருக்குமான தந்தை என அழைப்பது உண்மை என்றால் தனிப்பட்ட நபரான கி.வீரமணி பிடியில் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பெரியார் அறக்கட்டளையின் பல்லாயிரம் கோடி சொத்துக்களை வீரமணியிடம் இருந்து மீட்டு பெரியார் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்க வேண்டும்.
பிராமணர் சமூக மக்களை பாதுகாக்க பிராமண பாதுகாப்பு சட்டத்தை இயற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த அறிக்கையின் மூலமாக இந்துமக்கள்கட்சி கோரிக்கையை சமர்பிக்கிறது.





