இந்தியாவின் முன்னனி நிறுவனமான டாடா குழுமங்களின் தனைரா நிறுவனம் பெண்களுக்கான பிரத்யேகமான புடவை மற்றும் இந்திய பாரம்பரிய ஆடைகள் விற்பனையில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது..

இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு செயல்பட்டு வரும் தனைரா நிறுவனம் தனது புதிய பிராண்டான இனாயா எனும் புடவைகளை கோவையில் அறிமுகம் செய்துள்ளது.. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு,கோவை காந்திபுரத்தில் உள்ள தனைரா ஷோரூமில் நடைபெற்றது..
இதில், தனைரா நிறுவனத்தின் இந்தியா அளவிலான விற்பனை மேலாளர் கவுதம், தமிழ்நாடு மற்றும் கேரளா வர்த்தக மேலாளர் ஸ்ரீவள்ளி, கோவை கிளை நிர்வாக இயக்குனர் பரிமளா உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய தொகுப்பின் சிறப்பம்சங்களை விளக்கினர்.
பெண்களின் அன்றாட வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் நவீன ரசனையை ஒருங்கிணைக்கும் வகையில் இனாயா வகை புடவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்..
ரூபாய் .3,499 முதல் தொடங்கும் இந்த புடவைகள் , எடை குறைந்த மற்றும் வசதியான துணிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இயற்கையின் வண்ணங்கள், மலர் வடிவங்கள் மற்றும் நவீன கலை அம்சங்கள் இதில் பிரதிபலிக்கப்படுகின்றன.
மேலும், “Never Look the Same – எப்போதும் ஒரே மாதிரி தோற்றமளிக்கக் கூடாது” என்ற கருத்தை மையமாகக் கொண்டு இந்த ஆடைத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
டாடா குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்படும் தனைரா, இந்திய நெசவாளர்களின் கைவினை திறனை உலகளவில் கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு ஆடைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




