திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

இன்று இரவு தொடங்கிய வசந்த உற்சவ திருவிழா (21ந்தேதி) தொடங்கி வருகின்ற 29ஆம் தேதி வரை நடைபெறும். இதற்காக தினந் தோறும் மாலை உற்சவ சன்னதியில் இருந்து அருள்மிகு சுப்ரமணிய சுவாமி தெய்வானை அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி எழுந்துருளி. அதன் பிறகு லட்சுமி தீர்த்தம் அருகே உள்ள வசந்த மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து வசந்த மண்டபத்தை சுற்றி தண்ணீர் நிரப்பப்பட்ட மையத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளுவார். அதன் பின்பு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிறகு மீண்டும் சுவாமி உற்சவர் சன்னதியை அடைவார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாக பால்குட திரு விழா வருகின்ற 30ஆம் தேதி நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு சண்முகர் சன்னதியில் இருந்து சண்முகம் வள்ளி தெய்வானை கோயில் கொடி மரத்தின் அருகே உள்ள வைகாசி விசாக குறடில் எழுந்தருள்வார் இந்நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அங்கு சண்முகர் வள்ளி தெய்வானைக்கு அறக்கட்டளை அபிஷேகம் நடைபெற்று
அதன் பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டுவரும் பால்குடம் அபிஷேகங்கள் நடைபெறும்.
மேலும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் கிராமப் பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்தது வந்தது பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும், பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மற்றும் பறவை காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு நேத்திகடன் செலுத்துவார்கள் மதியம் 2 மணி வரை இந்த பாலாபிஷேகம் சண்முகருக்கு நடைபெறும் அதன் பின்பு சுவாமி மீண்டும் சண்முக சன்னதியை சென்றடைவார்.

இதன் தொடர்ச்சியாக விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக வருகின்ற 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மொட்டையரசு திருவிழா நடைபெறும் அன்றைய தினம் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி அதன் பிறகு திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள மொட்டையரசு திடலில் எழுந்தருளுவார். அங்கு பக்தர்கள் அமைக்கும் திருக்கண்ணில் காலை முதல் மாலை வரை எழுந்தருளி அருள்பாலிக்கும் சுப்பிரமணியசுவாமி இரவு பூ பல்லக்கில் திருப்பரங்குன்றம் கோயிலை வந்து அடைவார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றம் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் ஸ்தானிய பட்டார்கள் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.




