• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நான்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம்..,

ByP.Thangapandi

May 21, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்., இதில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் உள்நோயாளிகளாகவும் புறநோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர்.,

இந்நிலையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் இரத்த சுத்திகரிப்பிற்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் சூழ்நிலை உள்ளது., இதற்காக கிராமப் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் இதனையறிந்து ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை ரோட்டரி சங்கத்தின் தலைவர் நிக்கல்ராஜ் தலைமையில் சமுதாய மேம்பாட்டு நிதியிலிருந்து
சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் நான்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கி ரிப்பன் வெட்டி இரத்த சுத்திகரிப்பு அறையை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.,

இந்நிலையில் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய ரோட்டரி சங்கத்திற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.,

இதில் உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் ஸ்ரீநாத் தலைமையிலான மருத்துவ குழுவினர் உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் மகாலிங்கம் மற்றும் மதுரை ரோட்டரி சங்கம், மதுரை மேற்கு ரோட்டரி சங்கம், மதுரை மீனாட்சி ரோட்டரி சங்கம், உசிலம்பட்டி ரோட்டரி சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.,