• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

​கோவையில் ‘மனித நேய ஜனநாயக நீதிக்கட்சி’ அறிமுக விழா..,

BySeenu

May 21, 2026


கோவையில் ‘மனித நேய ஜனநாயக நீதிக்கட்சி’ என்ற புதிய அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா மற்றும் பொதுக்கூட்டம் இன்று போத்தனூரில் உள்ள மதினா ஹாலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கழகத் தொடக்கமும் தலைமையும் அப்துல் கபூர் (மக்கா பள்ளிவாசல் தலைவர்) மற்றும் ஜனநாயக வெற்றி கழக நிறுவனத் தலைவர் மாண்புமிகு A. ஒயிட் பாஷா ஆகியோர் முன்னிலையில் கட்சியின் தொடக்க விழா நிகழ்வுகள் துவங்கின.​இந்த விழாவிற்கு மனித நேய ஜனநாயக நீதிக்கட்சியின் நிறுவனரும் தலைவருமான கோவை இல்முதீன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச்செயலாளர் நூர் முகமது முன்னிலை வகித்து கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பு
​இந்த அறிமுக விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்: ரமேஷ் – மாநில செயலாளர் (Congress – OPC WING)
​ காஜா கான் – முன்னாள் மாமன்ற உறுப்பினர்
​ஆதி இப்ராஹிம் – தமிழக வெற்றி கழகம் (மாவட்ட முதன்மை செயற்குழு உறுப்பினர்)
​திரு. முகமது ஹனீப் – MJK கோவை மாவட்ட செயலாளர்
​திரு. முகமது ரியாஸ் – தமிழக நியூஸ் ரிப்போர்ட், முதன்மை பத்திரிகையாளர்
​திரு. காஜா மைதீன் மக்கள் நீதி மய்யம், பல்லடம் பொறுப்பாளர்
​அபுதாஹிர்
​முகமது இதிரீஸ் – முன்னாள் மாமன்ற உறுப்பினர்
​இவர்களுடன் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி மற்றும் வர்த்தக அணி செயலாளர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வழிநடத்தினர்.