• Tue. May 19th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் 10 -ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.!

ByP.Thangapandi

May 19, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 7-வது வார்டு நேதாஜி நகர் பாண்டி கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன்- மகேஸ்வரி தம்பதியின் 3 வது பிறந்த மகன் அஸ்வின்.,

இந்நிலையில் லாரி டிரைவரான பாலமுருகனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ள நிலையில் இவர் உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10 -ம் வகுப்பு பயின்று வந்தார்.,

இந்நிலையில் நாளை 10-ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில் தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்த மாணவன் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.,

இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,

நாளை தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள சூழலில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்து விடுவோமா என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.,

நாளை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,