• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் இஷிதா ராட்டி திடீர் ஆய்வு..,

ByM.I.MOHAMMED FAROOK

May 19, 2026

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பல்வேறு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

மேலும் மருத்துவமனைக்கு வருகின்ற பொதுமக்களுக்கு தரமான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், மருத்துவமனையை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். மேலும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை தட்டுப்பாடு இன்றி வழங்க அறிவுறுத்தினர்.