மதுரை விமான நிலைய குடியேற்றதுறை அதிகாரிகளால் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற சிலர் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தது தெரிய வந்தது அதனை தொடர்ந்து அவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
தற்போது இதே போல் இலங்கை பாஸ்போர்ட் பெற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சன்னாசி என்பவரின் மகன் கிருஷ்ணசாமி (வயது 62) என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் பூர்வீக குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் இலங்கை பாஸ்போர்ட் பெற்று இலங்கையில் தொழில் செய்து வருகிறார்
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் பெர்ணான்டோ என்பவரின் மனைவி மேரி ஜெனோ (வயது 64). இவரின் கணவர் மற்றும் குழந்தைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வந்தாலும் இவரது சகோதரர் இலங்கையில் உள்ளதால் இவர் இலங்கையில் வசித்து வருகிறார்.
மேரி ஜெனோ இலங்கை பாஸ்போர்ட் பெற்று கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்தவர் திரும்பி இலங்கை செல்லும் போது மதுரை விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இலங்கை குடியுரிமை பெற்ற இவர்கள் இருவருக்கும் தற்போது நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது .




