• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் திங்கள் கிழமை மதுக்கடைகள் மூடல்..,

ByS.Ariyanayagam

May 3, 2026

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் திங்கட்கிழமை மதுக்கடைகள் திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 4ம்தேதி மூடப்படுகிறது என கலெக்டர் சரவணன் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள்-2003, விதி 12 (2)-ன் படி உரிமம் பெற்று இயங்கி வரும், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (IMFL) சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை (எப்.எல்.6 தவிர) உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும் (04.05.2026) திங்கள் கிழமை வாக்கு எண்ணிக்கை நாள் அன்று மூடப்பட்டிருக்கும்.

மேலும், (04.05.2026) திங்கள் கிழமை அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.