வணிக சிலிண்டர் விலை உயர்வு – திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு வணிக சிலிண்டரின் விலையை உயர்த்திருப்பது உணவக தொழிலை முடக்கும் செயலாகும், இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
மேலும் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க அரசு உடனடியாக விலையை குறைக்க வேண்டும் சிலிண்டர் விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இன்றி முறையான விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் மற்றும் மாநகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர்.




