• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் வாக்குவாதம்..,

ByKalamegam Viswanathan

May 3, 2026

மதுரை வளையங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகின்றனர்.

இதே தனியார் கல்லூரியில் பாஜக தென் தமிழக வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயில் கலந்து கொண்டார் .

நீட் தேர்வு நடைபெறும் மையத்தில் பெற்றோர்கள் மற்றும் உடன் வருவல் கூட அனுமதிக்காமல் மையா வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்படுவார்கள். இந்நிலையில் அதே மையத்தில் தென் தமிழக பாஜக வேட்பாளர்கள் மற்றும் ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றதால் அதிர்ச்சி அடைந்த நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தனர்.

கல்லூரி வளாகத்துக்குள் ஏராளமான வாகனங்கள் ஆரன் அடித்துக்கொண்டே உள்ளே வருவதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு.

ஒரே நேரத்தில் தேர்வு மையம் மற்றும் கட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக கல்லூரி நிர்வாகத்தில் மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தனர்.

நிலையில் அமைச்சர் பீயுஸ் கோயில் நிகழ்ச்சியை முடித்து புறப்பட்டுச் சென்றார்

மேலும் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களும் தேர்வு முடித்து வெளியில் வந்ததால் பெற்றோர்கள் கல்லூரி விவாதத்தில் வாக்குவாதம் செய்து புறப்பட்டு சென்றனர் .