• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேகர்பாபு மனைவியுடன் சாமி தரிசனம்..,

ByKalamegam Viswanathan

Apr 28, 2026

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அமைச்சரும் ஆர்.கே நகர் தொகுதி வேட்பாளர் சேகர்பாபு மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்தால் நடை சாத்துவதில் 25 நிமிடம் தாமதம் கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் போட்டோ எடுத்துக் கொண்ட அமைச்சர் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அமைச்சரும் சென்னை ஆர் கே நகர் தொகுதி திமுக வேட்பாளருமான ஆன சேகர்பாபு அவரது மனைவியுடன் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணம் நிகழ்வில் கலந்து கொண்டார். அதன்பின்பு அங்கிருந்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய 12.55 மணிக்கு வருகை தந்தார்.

அவரை கோயில் நிர்வாக அதிகாரி ஞானசேகரன் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன் பின்பு மூலவர் சுவாமிகளை சாமி தரிசனம் செய்து விட்டு கொடிமரத்தின் முன்பு விழுந்து சாமி கும்பிட்டார். பின்னர் அவருக்கு அறங்காவலர் குழு தலைவர் சத்திய பிரியா மூலவர் முருகப்பெருமானின் படத்தினை அவருக்கு வழங்கினார்.
அதன் பின்பு புறப்பட்ட அமைச்சர் பக்தர்களின் வேண்டுக்கோளுக்காக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனால் 25 நிமிடம் திருக்கோயில் நடை சாத்துவதில் தாமதம் ஏற்பட்டது.