• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஒரு மாணவனுக்காக இரண்டு பள்ளி மாணவிகள் குடும்பிப்புடி சண்டை…

Byகாயத்ரி

Dec 23, 2021

ஆந்திர மாநிலத்தில், ஒரு மாணவனுக்காக இரண்டு பள்ளி மாணவிகள் நடுரோட்டில் தலைமுடியை பிடித்து அடித்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அனகாபல்லி பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் வெவ்வெறு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாணவன் காதலி ஒருவருடன் சாலையில் நடந்து செல்வதை பார்த்த மற்றொரு காதலி, அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே, இருவரும் ஒருவரின் தலைமுடியை ஒருவர் பிடித்துக்கொண்டு நடுரோட்டில் சண்டையிட்டனர். மூவரையும் அழைத்து விசாரணை நடத்திய போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஒரு பெண்ணுக்காக இரண்டு இளைஞர்கள் அடித்துக்கொள்ளும் காலம் போய், ஒரு இளைஞருக்காக இரண்டு மாணவிகள் அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.