• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை தெற்கு மகிளா காங்கிரஸ் தலைவி வேண்டுகோள்..,

Byமுகமதி

Apr 25, 2026

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் திரு.செல்வப் பெருந்தகை அவர்கள் விரைவில் அந்த பொறுப்பில் இருந்து விலகுவார் என்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் அந்தப் பொறுப்புக்கு தகுதி உள்ள வேறு யாராவது நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்த நிலையில் தான் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், காரைக்குடி என நான்கு தொகுதிகளில் தேர்தல் பணியாற்றிய புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிவந்தி நடராஜன் கூறுகையில் அடுத்த தலைவராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப.சிதம்பரம் தான் வரவேண்டும் என்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,
இப்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள பெண்களை மகிளா காங்கிரஸ் சார்பில் அழைத்துக் கொண்டு சென்று தேர்தல் பணி செய்தோம். அந்த வகையில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குள் மாண்புமிகு அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள் வெற்றி பெறுகிறார். அதைப்போலவே திருமயத்திற்கு சென்று தொகுதி முழுவதும் பணியாற்றியதில் அந்தத் தொகுதியில் அமைச்சர் ரகுபதிதான் வெற்றி பெறுகிறார். அதேபோல் அறந்தாங்கி தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் தான் வெற்றி பெறுகிறார். புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள்.

அதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடி அவர்கள் தான் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதெல்லாம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குறிப்பாக மகளிர் ஆற்றிய பணிகளில் தெரிந்த விஷயங்கள்.
அது ஒரு புறம் இருக்க என்று இளைஞர்கள் ஏன் தமிழக வெற்றிக்கழகத்தின் பக்கம் சேர்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. அந்த வகையில் அந்த கட்சியின் தலைவர் இளைஞராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனுபவம் மிக்க தலைவர்கள் நியமிக்கப் படுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி ஒரு மிகப்பெரிய தேசியக் கட்சியாகும். மிகப்பெரிய தலைவர்கள் இருந்து ஆட்சி செய்த கட்சி ஆகும். ஆனால் இப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகை அவர்கள் மாநில பொறுப்பில் விலக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஆனால் அவர் திறமையானவர்தான். அவரை எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். நன்றாக செயல்பட்டார் அவரை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்வதில் ஏதோ ஒரு தவறு நடந்து விட்டது.

அந்த விஷயத்தில் பெண்களை எப்படி கைவிட்டார் என்பது தெரியவில்லை. அது மட்டும்தான் அவர் மீது குறை. மற்றபடி சிறப்பாகச் செயல்பட்டார்.
தமிழக வெற்றி கழகத்தில் ஒரு இளம் தலைவர் வந்திருக்கிறார். அவரைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று இளைஞர்கள் செல்வதை போல் காங்கிரஸ் கட்சியிலும் ஓர் இளம் தலைவர் வரவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் எதிர்பார்க்கிறது. நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

அந்த வகையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் பேச்சாற்றல் மிக்கவர். எந்த சூழ்நிலையிலும் எதையும் எதிர்த்து நிற்கக் கூடியவர். அவர் யாருக்கும் பயப்பட மாட்டார். துணிச்சலாக இதை செய்ய வேண்டும் என்றால் அதைச் செய்து முடிப்பார்.

இந்திய அளவில் இளைஞர்கள் எப்படி ராகுல் காந்திக்கு பின்னாடி அணிவகுத்து நிற்கிறார்களோ அதுபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கார்த்திக் ப.சிதம்பரம் வந்தால் அவர் பின்னால் இளைஞர்கள் அணிவகுத்து நிற்பார்கள். புதிய இளைஞர்கள் ஏராளமான காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வார்கள்.
இப்போது தமிழக வெற்றி கழகத்தில் சென்று சேர்ப்பவர்கள் கூட தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்வார்கள். இவர் திறமையானவர். மற்றவர்களை ஈர்க்கும் கட்சியும் இவரிடம் இருக்கிறது.

யாரிடம் என்ன பேசுவது என்பதை அறிந்து அவர் பேசுவார். அவரிடம் செய்தியாளர்கள் கூட பேசுவதற்கு அஞ்சுவார்கள். ஏனென்றால் அனைவருக்கும் அனைவர் கேட்கும் கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் சொல்வார். அவரைப் போன்ற ஆற்றல் மிக்கவர்கள் தான் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமைக்கு வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.