• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஓட்டளிப்பதற்கு பட்டனை அமுக்காமல் லைட்டை அமுக்கிய சீனிவாசன்..,

ByS.Ariyanayagam

Apr 23, 2026

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் எம் வி எம் அரசு கலைக் கல்லூரியில் வாக்களிக்க வந்தார். அப்போது
வாக்களிக்கும் பொத்தானை அமுத்துவதற்கு பதிலாக அருகிலுள்ள லைட் எரியும் இடத்தில் அமுத்தியுள்ளார். அமுத்தினா பச்சை எரியுது.. அந்தப் பக்கம் சின்னம் தெரியுதா என அதிகாரி கேட்டார். வரலையே அம்மா,

பட்டண நல்லா அமுக்குங்க சார் என அதிகாரி கூறிய பின் மீண்டும் அழுத்தியுள்ளார்.
எம்மா வாங்க.. என தட்டு தடுமாறி என்னவென்று தெரியாமல் வாக்குச்சாவடி அதிகாரியை உதவிக்கு அழைத்தார்.

பின்னர் அதிகாரி இந்த பட்டனை நன்றாக அழுத்துங்கள் என கூறியதை அடுத்து அதைத்தானமா நான் அமுக்கினேன். என்னம்மா.. என்று, அதே பொத்தாளை மீண்டும் நன்றாக அமுத்தினார். பின்னர் பீப் சவுண்ட் வரவே வெளியே சென்றார்.