• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..,

ByK Kaliraj

Apr 21, 2026

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கல்லூரி இணைச் செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார்.5.37,88,888/-மதிப்பிலான கல்வி உதவித் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர்தம் உரையில், ஸ்ரீ காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் (பட்டாசுத் தொழிற்சாலை) நிறுவனத்தில் பணிபுரியும் பெற்றோரின் குழந்தைகள், பனிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் இளங்கலை படிப்பினை ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் பயின்று முதுகலைப் படிப்பினை பயிலும் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது என்று தெரிவித்தார். மேலும் விளையாட்டுப் பிரிவில் தேர்வாகி பயிலும் மாணவர்களுக்கான கல்வி, விடுதி மற்றும் உணவுக் கட்டணங்களை ஸ்ரீ காளீஸ்வரி அறக்கட்டளை வாயிலாக கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொள்கிறது என்றும் தெரிவித்தார்.

மாணவர்கள் இவ்வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விழாவில் கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி மற்றும் கல்லூரி ஆலோசகர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.