• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் – நாங்க இருக்கோம்!

Byஜெ.துரை

Apr 19, 2026

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘நாங்க இருக்கோம்’ என்கிற குறும்படம் தற்போது வெளியாகி உள்ளது.

லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் அதன் பங்குதாரர்களில் ஒருவரான வெங்கி சந்திரசேகர் இதன் கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை மேற்கொள்ளும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம் ஏற்கனவே ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்கிற படத்தை தயாரித்துள்ளது.

அது மட்டுமல்ல ‘திரவுபதி 2’. ‘அடியே’. ‘பீனிக்ஸ்’, ‘நந்தன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் இந்த நிறுவனம் தனது பங்களிப்பை கொடுத்துள்ளது.

‘முதலும் நீ முடிவும் நீ’ படத்தில் நகைச்சுவையில் கவனம் ஈர்த்த கௌதம் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெய் இதன் ஒளிப்பதிவையும் அரவிந்தன் படத்தொகுப்பையும் கவனிக்க, இதற்கு அவினாஷ் இசையமைத்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இதை உருவாக்கியுள்ளதாக கூறும் இயக்குநர் வெங்கி சந்திரசேகர்,

இதுபோன்று தொடர்ந்து பல சமூக விழிப்புணர்வு குறும்படங்களை எங்கள் நிறுவனம் உருவாக்கி வருகிறது,என்றார்.