• Sun. Jun 7th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மின்கம்பி உரசி தீ பிடித்த எரிந்த வைக்கோல் லாரி..,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேலாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (52) வைக்கோல் வியாபாரி. இவர் இவருக்கு சொந்தமான லாரியை ஓட்டிக்கொண்டு நேற்று காலை 11 மணிக்கு வாடிப்பட்டி அருகே நீரேத்தானை சேர்ந்த ஜெகதீசன் என்பவரது அறுவடை செய்த வயலில் வைக்கப்பட்டிருந்த 90 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார்.

அப்போது அங்குள்ள அய்யனார் கோயில் முன்பாக திடீரென்று எதிர்பாராத விதமாக மின்சார கம்பி உரசியதில் வைக்கோல் கட்டில் தீப்பிடிக்க தொடங்கியது அதைக் கண்ட ஜெயராஜ் என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டத்தில் லாரி வேகமாக ஓட்டி வந்த போது லாரியில் இருந்த வைக்கோல் கட்டுக்கள் சிதறி விழுந்ததில் வயல்வெளியில் காய்ந்திருந்த தாள்களில் தீபிடித்து மளமள என்று எரியத் தொடங்கியது.

இது பற்றி தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி பாலச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.