ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக மாநில துணை பொதுச்செயலாளரான அமைச்சர் ஐ.பெரியசாமி போட்டியிடுகிறார். இவர் இத்தொகுதியில் தாடிக்கொம்பு அகரம் பேரூராட்சி மற்றும் கிராம பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று பொது மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்கள் அவருக்கு மலர் தூவி ஆராத்தி எடுத்தவுடன் பூரண கும்ப மரியாதை அளித்தும் வரவேற்றனர். பொதுமக்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:
தமிழக முதல்வர் மீண்டும் முதல்வராவது உறுதியாகியுள்ள நிலையில் நீதிமன்ற காரணங்களால் கடந்த ஆட்சியில் தடையான சுமார் ஒன்றரை லட்சம் அரசு பணியிடங்களை விரைந்து நிரப்ப உள்ளார்.
இதனால் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும் ஒரு கோடியே 31 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகை பெறுகின்றனர். ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர் அவர்களுக்கும் சேர்த்து மாதம் ரூ. 2000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை தேர்வு செய்ய ரூ 8000 கூப்பன் பெண்களிடம் வழங்கப்படும். குடும்பங்கள் மேம்பட பெண்களுக்கான உரிமையையும் திட்டங்களையும் வழங்குவதில் முதல்வருக்கு நிகர் யாருமில்லை தரமான தொலைக்காட்சி பெட்டிகளை வீடு தோறும் முன்னாள் முதல்வர் கலைஞர் வழங்கினார்.
அவை தற்போது சிறப்பாக செயல்படுகின்றன.
அதன் பிறகு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்சி,கிரைண்டர், ஃபேன் போன்றவை தற்போது பயன்பாட்டிலேயே இல்லை. இதன்படி மக்களின் தேவையறிந்து கொடுப்பதுதான் திமுக அரசு. முதல்வர் மு.க ஸ்டாலினின் பொற்கால ஆட்சி நீடிக்க அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.
இந்த பிரச்சாரத்தில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் பேரூராட்சி தலைவர்கள் அகரம் நந்தகோபால் தாடிக்கொம்பு கவிதா சின்னத்தம்பி துணைத்தலைவர்கள் ஜெயபால் நாகப்பன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



