• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கிராமங்களில் வாக்கு சேகரிப்பு பயணம் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன்..,

ByK Kaliraj

Apr 17, 2026

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் வாக்கு சேகரிப்பு பயணம் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. கோட்டைப்பட்டி, மீனாட்சிபுரம், துலுக்கன்குறிச்சி, குகன்பாறை, அலமேலு மங்கைபுரம், செவல்பட்டி, கொட்டமடக்கிபட்டி, கீழான்மறைநாடு உள்ளிட்ட அனைத்து கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் மனதில் இருக்கும் கோரிக்கைகள், பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கவனமாகக் கேட்டு பதிவு செய்தோம்.

நமது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும், இக்கிராம மக்களின் குறைகள் அனைத்தும் முன்னுரிமையுடன் பரிசீலிக்கப்பட்டு, விரைவாகவும் உரிய முறையிலும் தீர்க்கப்படும் என்று வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதியளித்தார்.

மக்களின் இந்த அன்பும் ஆதரவும் எங்களுக்கு மேலும் உற்சாகத்தையும் பொறுப்புணர்வையும் அளிக்கிறது என்ன பேசினார். நிகழ்ச்சியில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.